கமர்சியல் இயக்குனருடன் கை கோர்க்கும் தனுஷ்

0
202

ரஜினிகாந்த் , கம்ல்ஹாசன் அவர்களை இயக்கிய கமர்சியல் இயக்குனருடன் கை கோர்க்கிறார் தனுஷ். இந்தியாவில் மட்டுமல்லாது, ஹாலிவுட்-லும் நடிகராக மாறி இருக்கும் தனுஷ், தமிழின் முன்னணி இயக்குனர் சுந்தர் சி உடன் இணைகிறார்.

 இதனை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படங்கள் மாறன், திரு சிற்றம்பலம்,  என தமிழ் படங்களும், The Gray Man  ஆங்கில படமும், Atrangi Re  ஹிந்தி படமும் ஒரு பட்டியலே உள்ளது. இந்த திரைப்படங்களுக்கு அடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், தெலுங்கு-ல் சேகர் கமுலா இயக்கத்தில் ஒரு படம் என தனுஷ் நடிப்பில் பல படங்கள் இருக்க, இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழின் முன்னணி கமர்சியல் இயக்குனரான சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் அந்த படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ள நிலையில், ஆயுத பூஜை தினத்தன்று , இந்த படம் வெளியாக உள்ளது. இதன் பின்னர் சுந்தர் சி மற்றும் தனுஷ் ஒரு புதிய படத்தில் இணைய விருக்கின்றனர். அதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.