ஜவான் பட வெற்றி விழாவில் ஷாருக்கானுக்கு பாடல் பாடி அசத்திய அனிருத் !

ஜவான் பட வெற்றி விழாவில் ஷாருக்கானுக்கு பாடல் பாடி அசத்திய அனிருத் !

  உலகம் முழுவதும் ஜவான் படத்திற்கான பிரமாண்ட வரவேற்பு மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில், படக்குழு வெற்றியை கொண்டாடும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அபாரமான வசூல் எண்ணிக்கையுடன், இன்னும் வெற்றிநடை போட்டு இன்னும் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. வெற்றிக்கு நன்றி சொல்லும் வகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முக்கிய நட்சத்திரக் குழுவினர் கலந்துகொண்டு, ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜவான் படத்தின் பாடல் நிகழ்ச்சியை படக்குழு நிகழ்த்தியது. இந்நிகழ்ச்சி மும்பையில் 2 மணி நேரம் மாலையில் நடைபெற்றது. படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர், சந்திப்பின் போது நேரலையில் இசையமைத்தார், கிங் கானின் ராப் டிராக்கை எழுதி பாடிய ராஜ குமாரியும் இதில் பங்குகொண்டார். ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனேவுடன், விஜய்…
Read More
பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஜவான் ! மூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா!

பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஜவான் ! மூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா!

  ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கத்தில் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இப்படம், வசூலில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான நான்கு தினத்திற்குள் ஐநூற்றியிருபது கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்து வருகிறது. ‘ஜவான்’ படம் வெளியாகி மூன்றாவது நாளான கடந்த சனிக்கிழமை, செப்டம்பர் 9 ஆம் தேதி, இந்திய திரையுலக வரலாற்றில் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரே நாளில் இந்திப் பதிப்பு 68.72 கோடி ரூபாயையும், உலகளவில் 144.22 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது. எந்த ஒரு இந்திய திரைப்படமும் இதற்கு முன்பு இத்தகைய வசூல் சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடதக்கது. "ஜவான்" திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தென்னிந்திய சினிமாவில் ப்ளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் அட்லீ இத்திரைப்படத்தில் கிங்கான்…
Read More
ரஜினி சார் நினைத்ததை விட 10 மடங்கு வந்துள்ளது ! வெற்றி விழாவில் இயக்குனர் நெல்சன் !

ரஜினி சார் நினைத்ததை விட 10 மடங்கு வந்துள்ளது ! வெற்றி விழாவில் இயக்குனர் நெல்சன் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையரங்களில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு படமாக இருப்பதாக படம் பார்த்த அனைவருக்கும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தை தவிர அண்டை மாநிலங்களிலும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் நெல்சன் பேசியதாவது சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பு பொறுப்புகளை கண்ணன் மற்றும் செம்பியன் இருவருமே எடுத்துக் கொண்டார்கள். கலாநிதி மாறன் சாரிடம் ஒற்றை வரியில் கதை சொல்லி தப்பித்து விடலாம் என நினைத்தால் அவரோ இரண்டரை மணி நேரம் அல்ல 5 மணி நேரம் வரை கூட பொறுமையாக அமர்ந்து கதை கேட்பார். இந்த படத்தை தனது இதயத்திற்கு நெருக்கமாக நினைத்தார் கலாநிதி…
Read More
பீஸ்ட் திரை விமர்சனம்

பீஸ்ட் திரை விமர்சனம்

இயக்கம் - நெல்சன் நடிகர்கள் - விஜய், பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக மாறியிருக்கும் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஒரு ஷாப்பிங் மாலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்து அங்கே இருக்கும் மக்களை பணய கைதிகளா வைத்து அரசை மிரட்டும் தீவிரவாதிகளிடம் இருந்து தனி ஒரு ஆளா போராடி அம்மக்களை மீட்கிற  உளவாளி பற்றிய கதை. உளவாளி, துப்பாக்கி, ஆக்‌ஷன் காட்சிகள், ஆயுதங்கள்னு ஹாலிவுட் ஆக்‌ஷன் திரில்லர் படங்களுக்கே உரித்தான எலமெண்ட்க்கள் நிரம்பி வழிந்தாலும், கதை என்னமோ பழசாத்தான் இருக்கு. கதை என்னத்தை பண்ண போகுது இண்டரஸ்டிங் ஆன ஸ்கிரீன் பிளே தான் முக்கியம் அப்படினு ஸ்கீரினில் இருந்து கண்ணெடுக்காம பார்த்தாலும், ஏமாற்றத்தை அள்ளி தெளிச்சுருக்கு இந்த பீஸ்ட் படம். விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோவ தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட்டா காமிச்சா, யாரு ஒத்துக்க மாட்டா, ஆனா அப்படி ஒத்துக்கிட்ட பார்வையாளர்கள் கிட்ட திரைக்கதைல எதாவது சேர்த்து போட்டு கொடுத்தாதான், ஜேம்ஸ்பாண்ட்…
Read More