மனைவியை விவாகரத்து செய்த, இசையமைப்பாளர் டி இமான்!

0
273

இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்

இசையமைப்பாளர் டி இமான், திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மனைவி மோனிக்கா ரிச்சர்டிடமிருந்து பிரிந்ததாகத் தெரிவித்துள்ளார். கணினி பொறியாளர் மோனிக்கா என்பவரை இமான் 2008-ம் ஆனது திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்துள்ளனர். ஆனால் தற்போது தான் இமான் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிச்சிருக்கார்.

இது குறிச்சு இமான் பகிர்ந்துள்ள செய்திகுறிப்பு

“எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ஆர்வலர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்லவே, மோனிக்கா ரிச்சர்டும் நானும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து, இனி கணவன் மனைவியாக இருக்க முடியாது என்று முடிவெடுத்தோம்.

எங்கள் நலம் விரும்பிகள், இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரையும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,

மேலும் நாங்கள் இதிலிருந்து முன்னேற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி” என்று தெரிவிச்சிருக்கார்.

இந்தத் தம்பதியருக்கு வெரோனிகா டோரதி இமான் மற்றும் பிளெசிகா கேத்தி இமான் என இரண்டு மகள்கள் இருக்காங்க என்பது குறிப்பிடத்தக்கது