RK சுரேஷை திட்டிய பாலா !

இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் இயக்குவர் பாலா பேசும்போது இனி தான் RK சுரேஷ் கவனமுடன் இருக்க வேண்டுமென கடிந்து கொண்டார்.

 

இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது..

RK சுரேஷ் அப்பாவிடம் படம் எடுப்பதற்காக கதை சொல்லியுள்ளேன் ஆனால் அவர் சாமி படம் தான் எடுக்க போறேன், இந்தக்கதை எடுக்க முடியாது என்று சொல்லி எனக்கு 500 ரூபாய் பணம் தந்து அனுப்பினார். ஆனால் அதன் பிறகு தான் அவர் வள்ளல் என தெரியவந்தது. பின் அவர் மகன் என் படமான தர்மதுரை படத்தை எடுத்து, என்னை புகழ் பெற செய்தார். தந்தை இல்லாத மகனுக்கு தமையனே தந்தையாக அவரை பார்த்துக்கொள்கிறார் அண்ணன் பாலா. உங்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் எல்லாம் உங்கள் தந்தையின் புண்ணியம் தான். ஒரு வில்லனை நாயகனாக ஆக்குவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இந்தப்படத்தை பார்க்கும் போது சுரேஷின் கண்களில் ஒரு அன்பு தெரிகிறது அவருக்கு நடிப்பு சிறப்பாக வருகிறது. அவர் அதை கெட்டியாக பிடித்துகொள்ள வேண்டும். இயக்குநர் நன்றாக இயக்கியிருக்கிறார்.
ஜீவி பிரகாஷ் இசை கேட்க அற்புதமாக இருக்கிறது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என நான் நம்புகிறேன் நன்றி.றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் தயாரிப்பாளர் சுரேஷ் பேசியதாவது…

என் தந்தை, என் அம்மா, என் தந்தைக்கு அடுத்து என்னை கை தூக்கி அழைத்து செல்லும் பாலா அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றி. 13 வருசமா நான் திரைத்துறையில் இருக்கிறேன். பத்திரிக்கைகள் எனக்கு நிறைய ஆதரவு தந்துள்ளார்கள். இப்போது திரையரங்குகள் முழுக்க திறந்த பின் என் பட விழா நடப்பது மகிழ்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் முன்னால் நான் நடிகனாக மாறி வந்துள்ளேன். ஜோசப் படம் பார்த்துவிட்டு, அது என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது, பாலா அண்ணனிடம் போய் சொன்னேன், இது நல்ல படம் ஆனால் இந்தப்படத்திற்கு நிறைய முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார். இந்தப்படத்திற்காக உடல் எடை ஏற்றினேன். நிறைய உழைத்தேன். உழைத்தால் தான் சினிமா அங்கீகாரம் தரும். பாலா அண்ணன் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார்களை இயக்கிய பத்மகுமார் சார் இயக்கத்தில் நடிப்பது வரம். என் படகுழுவினருக்கு நன்றி. ஜீவியின் ரசிகன். அவரது இசைக்கு நன்றி எல்லோருக்கும் நன்றி.

தயாரிப்பாளர், இயக்குநர் பாலா பேசியதாவது….

வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்த ரீமேக் பண்ணலாம் என்ற போது சுரேஷ் நான் பண்றேன் அண்ணா என்றான். அப்ப அதே டைரக்டரை அழைப்போம் என அவரை கூப்பிட்டு நீங்கள் அங்கே செய்ய முடியாததை, பணம் பற்றி கவலை இல்லாமல் பண்ணுங்கள் என்றேன். அவரும் மலையாள படத்தை விட இந்தப்படத்தை அழகாக எடுத்துள்ளார். இந்தப்படம் மூலம் சுரேஷுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் அதை அவன் காப்பாற்றி கொள்ள வேண்டும், படம் நன்றாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.