23
Feb
இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குவர் பாலா பேசும்போது இனி தான் RK சுரேஷ் கவனமுடன் இருக்க வேண்டுமென கடிந்து கொண்டார். இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது.. RK சுரேஷ் அப்பாவிடம் படம் எடுப்பதற்காக கதை சொல்லியுள்ளேன் ஆனால் அவர் சாமி படம் தான் எடுக்க போறேன், இந்தக்கதை எடுக்க முடியாது என்று சொல்லி எனக்கு 500 ரூபாய் பணம் தந்து அனுப்பினார். ஆனால் அதன் பிறகு தான்…