இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், சிவாங்கி இணைந்து பாடிய மெலோடி பாடல்

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், சிவாங்கி இணைந்து பாடிய மெலோடி பாடல்

முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அமீகோ கேரேஜ்’. இப்படத்திற்காக இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையில், இசையமைப்பாளர், நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர். சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா இப்படத்தின் முதல் பாடலை பாடியிருந்தார். இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து இப்படத்தின் இரண்டாவது மெலோடி பாடலை பாடியுள்ளனர். திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் காந்தக்குரலும், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியின் வசீகர குரலும் இணைந்து, இப்பாடலை மிக அற்புத அனுபவமாக மாற்றியுள்ளது. அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும் அருமையான மெலடி கீதமாக, விரைவில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது. கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக, சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ். இப்படத்தில் நடிகர் மாஸ்டர்…
Read More
RK சுரேஷை திட்டிய பாலா !

RK சுரேஷை திட்டிய பாலா !

இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குவர் பாலா பேசும்போது இனி தான் RK சுரேஷ் கவனமுடன் இருக்க வேண்டுமென கடிந்து கொண்டார்.   இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது.. RK சுரேஷ் அப்பாவிடம் படம் எடுப்பதற்காக கதை சொல்லியுள்ளேன் ஆனால் அவர் சாமி படம் தான் எடுக்க போறேன், இந்தக்கதை எடுக்க முடியாது என்று சொல்லி எனக்கு 500 ரூபாய் பணம் தந்து அனுப்பினார். ஆனால் அதன் பிறகு தான்…
Read More
“ஓ மை கடவுளே” போன்று  ‘பேச்சிலர்’ படமும் ஒரு அழகான கருத்தை சொல்லும்- டில்லி பாபு

“ஓ மை கடவுளே” போன்று ‘பேச்சிலர்’ படமும் ஒரு அழகான கருத்தை சொல்லும்- டில்லி பாபு

ஆக்சஸ் ஃபிலிம் பேக்டர் (Axcess Film Factory) தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் “பேச்சிலர்” படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் இயக்குநர் சதீஷ் செல்வகுமார், தயாரிப்பாளர் G.டில்லிபாபு மீடியாக்களைச் சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர் G.டில்லிபாபு கூறியது.: எங்கள் நிறுவனத்தின் சார்பில், தரமிகுந்த கதைகளை மட்டுமே தொடர்ந்து தயாரித்து வருகிறோம். வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட படங்களையே இது வரையிலும் அளித்து வந்திருக்கிறோம். இந்த திரைப்படமும் அந்த வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும். இந்தப் படம் வயது வந்தோர் மட்டுமே, பார்க்கும் தன்மை கொண்ட படமல்ல. இத்திரைப்படம் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பார்க்கும் அழகான கமர்ஷியல் படமாகும். “ஓ மை கடவுளே” போன்று இப்படமும் ஒரு அழகான கருத்தை சொல்லும். ஆனால் அதிலிருந்து மாறுபட்டிருக்கும். படத்தை சென்சார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 2021 கோடை காலத்தில் படம் வெளியாகும். இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியது: கோயம்புத்தூரில் இருந்து…
Read More
Provoke magazine வழங்கிய சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்!!

Provoke magazine வழங்கிய சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்!!

நடிகராக ஜி.வி பிரகாஷ் தனது தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார். நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்த அவருக்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இசைஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாக கொண்ட இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றது. ஜப்பானில் நடைபெற்ற டாக்கியோ இண்டெர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெலில் கலந்து கொண்ட சர்வம் தாளமயம் ஜப்பான் ஆடியன்ஸை…
Read More