கேரள கோவிலில் ஒலித்த புஷ்பா படத்தின் “ஏ சாமி” பாடல் !

சமீபத்த்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற புஷ்பா படத்தில், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்த ‘ஏ சாமி’ பாடல் கேரள கோவிலில் நாதஸ்வர கலைஞர்களாக வாசிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைத்துறையே திரும்பி பார்க்கும், பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்த புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியானது.
கொரோனா காலகட்டத்தை கடந்து திரையரங்குகளில் கூட்டத்தை வரவைத்ததோடு தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் இந்தியா முழுதும் மிகப்பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது.

இப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசை மிக முக்கியமாக இருந்தது குறிப்பிடதக்கது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானதுடன் பெரும் பேசுபொருளாகவும் ஆனது குறிப்பிடதக்கது. “ஏ சாமி, உ சொல்றியா உ ஊ சொல்றியா” பாடல்கள் பம்பர் ஹிட்டானதுடன் இணையமெங்கும் விவாதப்பொருளாகவும் ஆனது. திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்து கொண்டிருக்கும் இப்பாடல் கேரள கோயிலில் வாசிக்கப்பட்டது இப்பொது பெரும் செய்தியாக மாறியுள்ளது.

கேரள கோவில் ஒன்றில் இறைவனுக்கு இன்னிசை வாசிக்கும் நாதஸ்வர குழுவினர் இப்பாடலின் இசையை வாசித்துள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக, கன்னட செய்தி சேனல் இதை செய்தியாக வெளியிட்டது. இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், தனது பாடல் இவ்வளவு பெரிய பிரபலத்தை அடைந்து, அனைவரையும் ஈர்த்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் பகிர்ந்துள்ள டிவிட் இங்கே