மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய படமான டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் டீஸர் வெளியானது!

 

டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதைத் தொடர்ந்து வெளியான டைட்டில் லுக்கும் ரசிகர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனான டைகர் நாகேஸ்வர ராவின் உலகை தரிசிக்கும் நேரம் இது. வம்சி இயக்கத்தில் மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படம் “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் அதிரடியான டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

ரவிதேஜாவை இந்தப்படத்தின் டீஸரில் பார்த்த பிறகு, இந்த டைட்டில் ரோலில் வேறு எந்த நட்சத்திரத்தையும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. கதாப்பாத்திரமாக அவரது உருமாற்றத்தில் இருந்து கதாபாத்திரத்தை சித்தரித்தது வரை, ரவி தேஜா டீஸரில் அசத்தியிருக்கிறார். அவர் தனது அசாத்திய நடிப்பால் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறார். இயக்குநர் வம்சியின் சிறப்பான எழுத்து மற்றும் சிறந்த இயக்கம் படத்தை மெருகூட்டுகிறது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

Tiger Nageswara Rao Teaser: Ravi Teja Roars As Thief From Stuartpuram; Film  to Arrive in Theatres on October 20 (Watch Video) | 🎥 LatestLY

R மதி தனது கேமரா மூலம் கதைக்கு பிரமாண்டத்தை கொண்டு வருகிறார், இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது அபாரமான ஸ்கோரின் மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் தந்துள்ளார். புரடக்‌ஷன் டிசைனர் அவினாஷ் கொல்லா சிறப்புக்குரியவர். தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களை தொடர்ந்து பான் இந்தியா பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் அகர்வால் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.