துல்கர் சல்மானுக்கு கொரோனா !

துல்கர் சல்மானுக்கு கொரோனா !

கொரோனா இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், தற்போது பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது இதில் இப்போது லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் மலையாள முன்னணி நடிகர் துல்கர் சல்மான். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவு: "சற்று முன்னர் தான் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டில் தனிமையில் உள்ளேன். காய்ச்சலுக்கான லேசான அறிகுறிகள் உள்ளது. மற்றபடி நான் நலமாக இருக்கிறேன். கடந்த சில நாட்களாக படப்பிடிப்பின் போது என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டு மேலும் அறிகுறிகள் தெரிந்தால் சோதனை செய்து கொள்ளுங்கள். இந்த பெருந்தொற்று காலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்"
Read More
ஆக்டருங்க, டெக்னிஷியங்கள் எல்லாம் சம்பளத்தைக் குறைங்கப்பூ!- பாரதிராஜா!

ஆக்டருங்க, டெக்னிஷியங்கள் எல்லாம் சம்பளத்தைக் குறைங்கப்பூ!- பாரதிராஜா!

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்குக் காலம் முடிவடைந்து சினிமா ஷூட்டிங் தொடங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் நடிகர்கள் தங்களின் 30% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. இன்று பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில்,“தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாகச் சமூக இடைவெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணிசெய்யுங்கள். திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீளுதலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.   கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களைமுடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும். அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை, அதற்கான…
Read More