விவாகரத்து செய்யும் அடுத்த நட்சத்திர தம்பதி மீண்டும் கிளம்பும் பூதம் !

 

நாக சைதன்யா – சமந்தா விவகாரத்து விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரியவிருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக வெளியான செய்திலிருந்தே ரசிகர்கள் இன்னும் முழுமையாகமீளாத நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது கணவரைப் பிரியவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவர் பெயரை நீக்கியிருக்கிறார். இதுதான் விவகாரத்து சர்ச்சைக்கு காரணம்.

சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, நடிகர் கல்யாண் தேவ் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்கணவர் பெயரை இணைத்துஸ்ரீஜா கல்யாண் என்று வைத்திருந்தார். தற்போது கணவர் பெயரை நீக்கிபழையபடி தனது குடும்பப் பெயருடன் ஸ்ரீஜா கொனிடேலா என்று வைத்துள்ளார். மேலும் கல்யாணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அவர் பின்தொடரவில்லை. கல்யாண் தேவை ஸ்ரீஜா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா முதன்முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை நீக்கினார். இதுதான் இருவரும் பிரியவிருப்பதாக சர்ச்சை உருவானதற்கு அடிப்படைக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.