பில்லா பாண்டி இசை வெளியீட்டு விழா அமர்க்களம்!

0
282

கோலிவுட்டில் வெற்றி தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வந்த ஆர்.கே.சுரேஷ், பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் தொடர்ந்து ‘மருது’, ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக அதிரடி காட்டியவர், ‘பில்லா பாண்டி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

ஜே.கே.பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பிரபாத் தயாரிக்கும் இப்படத்தில், ‘மேயாத மான்’ புகழ் இந்துஜா, சாந்தினி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்க, சிறப்பு தோற்றம் ஒன்றில் விதார்த் நடித்திருக்கிறார். சூரி கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் கே.சி.பிரபாத், தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், செளந்தர், மாஸ்டர் கே.சி.பி.தர்மேஷ், மாஸ்டர் கே.சி.பி.மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எம்.எம்.எஸ்.மூர்த்தி எழுத, ராஜ் சேதுபதி இயக்கியிருக்கிறார். ஜீவன் ஒளிப்பதிவு செய்ய, இளையவன் இசையமைத்திருக்கிறார். ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்ய, மேட்டூர் செளந்தர் கலையை நிர்மாணித்துள்ளார். கல்யாண், விஜி, சாண்டி ஆகியோர் நடனம் அமைக்க, சக்தி சரவணன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கவிக்குமார், தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தை தம்பி பூபதி கவனிக்க, மக்கள் தொடர்பை நிகில் கவனிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் ஷாம், கருணாஸ், விவேக், உதயா, சூரி, இயக்குநர்க்ள் சீனு ராமசாமி, சீமான், ஆர்.வி.உதயகுமார், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டார் கள். மேலும், அஜித் ரசிகர்களும், ஆர்.கே.சுரேஷின் ரசிகர்கள் ஏராளமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.

கலைவாணர் அரங்கம் அமைந்திருக்கும் பகுதி முழுவதுமே கட்-அவுட், பேனர்கள் என்று அரசியல் பொதுக்கூட்டம் போல, ‘பில்லா பாண்டி’ இசை நிகழ்ச்சியை நடத்திய ஆர்.கே.சுரேஷ், கலைவாணர் அரங்கத்தையே அதிர செய்துவிட்டார்.