16
Dec
இயக்குநர் - jon watts நடிகர்கள் - Tom Holland, Zendaya, Jacob, Benedict Cumberbatch கதை - Spiderman அடையாளம் உலகுக்கு தெரிந்துவிட, அதனால் அவனது நண்பர்களுக்கும் சிக்கல் உண்டாகிறது, அவர்கள் வாழ்க்கை பாதிக்க ஆரம்பிக்க, அதனை தீர்க்க டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் உதவியை ஸ்பைடர்மேன் நாடுகிறார். அவர் ஒரு மந்திரத்தை ஏவ அதில் ஏற்படும் சிக்கல்களால் மல்டிவெர்ஸ் உலகம் திறந்து, பல வில்லன்கள் வருகிறார்கள், அவர்களை ஸ்பைடர்மேன் எப்படி, யாரின் உதவி கொண்டு ஜெயித்தான் என்பது தான் கதை மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில், Avengers: Endgame திரைப்படத்திற்கு பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களை பித்துப்பிடித்த நிலைக்கு கொண்டு சென்ற படம் என்றால் அது இந்த ஸ்பைடர் மேன் படம் தான் எனலாம் அதற்கு முக்கிய காரணம் படத்தின் கதை மல்டிவெர்ஸ் சம்பந்தமானது என்பதும், தமிழகம் முதல் உலகமெங்கும் முதன் முதலில்…