22
Dec
இயக்கம் - சர்ஜூன் திரைக்கதை, வசனம் - சங்கர் தாஸ் கதை - துபாயில் செய்யாத கொலைக்கு தண்டனையாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் தூக்கில் போட நேரம் குறிக்கப்படுகிறது. அவர்கள் விடுதலையாகி விடுவார்கள் என நம்பியிருக்கும் குடும்பம் உதவிக்காக கதறி அழ, அந்த அழுகுரல் ஒருதொலைக்காட்சியில் வேலைக்குபுதிதாக இணையும் நியூஸ்புரோகிராமருக்கு எட்டுகிறது அவர்அவர்களைகாப்பாற்ற முயற்சி எடுக்க அதில் ஜெயித்தாரா என்பதே கதை. ஒரு நியூஸ் சேனலின் பின்னணியில் நிகழும் எளிய மனிதர்களுக்கான நீதி தேடிய பயணம் தான் கதைகரு. படம் ஆரம்பித்தவுடன் நம்மை உள் இழுத்து கொள்வதற்கான அத்தனை அம்சங்களும் படத்தின் கதையிலேயே இருப்பது நன்று. படம் ஆரம்பித்தவுடன் எந்த தேவையில்லாத காட்சிகளும் இல்லாமல் கதைக்குள் நுழைவதும் படம் முடியும் வரையிலும் எந்த பிசிறும் இல்லாமலும் கதை பயணிப்பதும் அழகு. ஓடிடி தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது, திரையரங்கிற்குகான மசாலாக்கள் இல்லாமல் நேரடி கதை சொல்லலில்…