‘டிமான்டி காலனி 2’ உங்களை மிரட்டும் !!

  பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் 'டிமான்டி காலனி 2' . விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. நாயகி பிரியா பவானி சங்கர் பேசியதாவது... உங்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம். போன வருடம் இந்தப்படம் ஆரம்பித்தோம் அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. நிறைய நைட் ஷூட் பண்ணினோம், எனக்கு இந்த கதாபாத்திரம் தந்ததற்கு அஜய்க்கு பெரிய நன்றி. அருள்நிதி உடன் இரண்டாவது படம் எனக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். அருண் பாண்டியன் சார் உடன் ஷீட்டில் வீட்டுக்கதைகள் பேசிக்கொண்டிருப்பேன், ஜாலியாக…
Read More
ப்ளாக்பஸ்டர் வெற்றி படமான “டிமான்ட்டி காலனி” படத்தின் இரண்டாவது பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ப்ளாக்பஸ்டர் வெற்றி படமான “டிமான்ட்டி காலனி” படத்தின் இரண்டாவது பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

  தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மிக வித்தியாசமான வகையில் மிரள வைக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் பாகத்தை விடவும் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில், மிக வித்தியாசமாக அமைந்திருக்கும் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. மேலும் இந்த போஸ்டர் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி, அனைவரையும் இருக்கை நுனியில் கட்டிப்போட்டு பயமுறுத்திய திரைப்படம் “டிமான்ட்டி காலனி”. 2015 ல் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம், 8 வருடங்களுக்குப் பிறகு 'டிமான்ட்டி காலனி 2' என்ற பெயரில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி உள்ளது. முந்தின பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. டிமான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த…
Read More
“விஷால்-34” படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை ப்ரியா பவானி சங்கர்! அதிரடி வேகத்தில் படப்பிடிப்பு தொடங்கியது!

“விஷால்-34” படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை ப்ரியா பவானி சங்கர்! அதிரடி வேகத்தில் படப்பிடிப்பு தொடங்கியது!

  ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இனிதே துவங்கியது. 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் இந்த புதிய படத்தினை, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணைந்து பெரும் பொருட்செலவில், பிரமாண்டமாகத் தயாரிக்கின்றனர். இது விஷாலின் 34வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் தற்போதைக்கு "விஷால்-34" என அழைக்கப்பட்டு வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர் இப்படத்தில் முதல்முறையாக விஷால் ஜோடியாக இணைகிறார்.தனது முதல் படமான தமிழ் படம் துவங்கி, அனைத்து படங்களிலும் நல்ல கதையம்சம், உறவுமுறை, காமெடி, விறுவிறுப்பான ஆக்‌ஷன் என ரசிகர்களுக்கு…
Read More
ருத்ரன் இசை வெளியீட்டு விழா! 150 குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவிச்சிருக்கார்

ருத்ரன் இசை வெளியீட்டு விழா! 150 குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவிச்சிருக்கார்

ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிச்சிருக்கார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்றார். ருத்ரன் இசை வெளியீட்டு விழா இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், 'ருத்ரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் 150 குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவிச்சிருக்கார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வியை புதிய முயற்சியாக வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும்" அப்படீன்னு சொல்லி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
Read More
அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி சாதனை

அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி சாதனை

அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றித்திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது. ஜீ5 தளத்தின் லேட்டஸ்ட் வெளியீடாக திரையிடப்பட்ட, இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்க்கும் யானை திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. சென்னை (26-08-2022):* கடந்த வாரம் (ஆகஸ்ட் 19, 2022) ஜீ5 தளத்தில் திரையிடப்பட்ட, நடிகர் அருண் விஜய் நடித்த “யானை” திரைப்படம், குறுகிய காலத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து ஒரு அற்புதமான சாதனையைப் படைத்துள்ளது. இத்திரைப்படம், திரையரங்கில் வெளியான போதே விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து பலத்த பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடதக்கது. இப்போது ஓடிடி பிரீமியரில் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாசம், ஆக்சன், செண்டிமெண்ட், காதல் மற்றும் குடும்பப் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்…
Read More
குருதி ஆட்டம் எப்படி இருக்கு?

குருதி ஆட்டம் எப்படி இருக்கு?

எழுத்து & இயக்கம் : ஸ்ரீ கணேஷ் நடிகர்கள்: அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதிகா, ராதா ரவி, கண்ணா ரவி, ஆறுமுகம், வட்சன். இசை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு: ராக்போர்ட் முருகானந்தம் கபடி ஆட்டத்தில் தொடங்கும் சிலரின் வாழ்கை எப்படி குருதி ஆட்டத்தில் போய் முடிகிறது என்பதே கதை. ஒரு பக்காவான ஆக்‌ஷன் திரைப்படத்திற்கான ஒன்லைன் கதையை வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ். அதுமட்டுமில்லாமல் அவர் கதையை டீல் செய்யும் விதம் அபாரம், ஒரே நோக்கில் கதையை பயணிக்கவிடாமல், பல கோணங்களுக்கு கதையை எடுத்து செல்லும் வித்தை அவரிடம் இருக்கிறது. இது தனித்துவமான ஒரு வித்தை, ஒரு நாவலை போன்று திரைப்படத்தை கையாளும் யுக்தி இது. ராதிகாவின் ஒப்பனிங் காட்சி, பல கேங்க்கள், கபடி ஆட்டம் என திரைக்கதையின் ஆரம்பம் பரபரவென தொடங்குகிறது. ஒரு ராவான கேங்ஸ்டர் படத்திற்கான அத்தனை அம்ஷங்களும் அழகாய் பொருந்திய ஒரு திரைப்படமாக வரவேண்டிய அனைத்து…
Read More
யானை டிரைலர் வெளியீட்டு விழா

யானை டிரைலர் வெளியீட்டு விழா

“யானை” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா ! தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் “யானை” திரைப்படம் முழுப்பணிகளும் முடிக்கப்பட்டு, வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குனர் ஹரி பேசியதாவது.... நானும், அருண்விஜய் சாரும் இணைய வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்த கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் சக்தி சார். இந்த படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த…
Read More
ஜீ5- ஒரிஜினல் வெளியீடான, ‘பிளட் மணி’ (Blood Money) திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை ஒருங்கே வென்றுள்ளது !

ஜீ5- ஒரிஜினல் வெளியீடான, ‘பிளட் மணி’ (Blood Money) திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை ஒருங்கே வென்றுள்ளது !

  ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 24 அன்று நேரடியாக வெளியான சஸ்பென்ஸ் டிராமா திரைப்படமான 'பிளட் மணி' (Blood Money) உலகமெங்கும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் நடிப்பில் வெளியான, 'பிளட் மணி' திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று, ஜீ5 OTT தளத்தில், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளை பெற்று, புதிய சாதனைகள் படைத்து வருகிறது. ‘பிளட் மணி’ (Blood Money) திரைப்படம் சமூகத்தில் ஊடகங்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என கூறும் படைப்பாக உருவாகி பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது, பிளட் மணி திரைப்படம், ஊடகங்களின் உண்மையான சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாக வந்துள்ளது. ஒரு அற்புதமான கதையுடன், சமூகத்தின் மீதான அழுத்தமான கேள்வியுடன், எளிய மனிதர்களின் வலியை சொல்லும் படைப்பாக, இப்படம் இருப்பதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். நடிகர்களின் நடிப்பு,…
Read More
2 மில்லியனை கடந்த யானை!

2 மில்லியனை கடந்த யானை!

நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் “யானை” படத்தின் டீசர் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை ! டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் பிரமாண்ட படைப்பு “யானை”. தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் “யானை” படத்தின் குறுகிய காலத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த வருடத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக, இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் “யானை” படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஹரியின் தனித்த முத்திரையில், கிராமத்து பின்னணி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.…
Read More
‘பிளட் மணி’ (Blood Money)  திரைப்பட விமர்சனம் !

‘பிளட் மணி’ (Blood Money)  திரைப்பட விமர்சனம் !

இயக்கம் - சர்ஜூன் திரைக்கதை, வசனம் - சங்கர் தாஸ் கதை - துபாயில் செய்யாத கொலைக்கு தண்டனையாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் தூக்கில் போட நேரம் குறிக்கப்படுகிறது. அவர்கள் விடுதலையாகி விடுவார்கள் என நம்பியிருக்கும் குடும்பம் உதவிக்காக கதறி அழ, அந்த அழுகுரல் ஒருதொலைக்காட்சியில் வேலைக்குபுதிதாக இணையும் நியூஸ்புரோகிராமருக்கு எட்டுகிறது அவர்அவர்களைகாப்பாற்ற முயற்சி எடுக்க அதில் ஜெயித்தாரா என்பதே கதை. ஒரு நியூஸ் சேனலின் பின்னணியில் நிகழும் எளிய மனிதர்களுக்கான நீதி தேடிய பயணம் தான் கதைகரு. படம் ஆரம்பித்தவுடன் நம்மை உள் இழுத்து கொள்வதற்கான அத்தனை அம்சங்களும் படத்தின் கதையிலேயே இருப்பது நன்று. படம் ஆரம்பித்தவுடன் எந்த தேவையில்லாத காட்சிகளும் இல்லாமல் கதைக்குள் நுழைவதும் படம் முடியும் வரையிலும் எந்த பிசிறும் இல்லாமலும் கதை பயணிப்பதும் அழகு. ஓடிடி தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது, திரையரங்கிற்குகான மசாலாக்கள் இல்லாமல் நேரடி கதை சொல்லலில்…
Read More