டைப் 2 நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களைத் தீர்க்க வந்துவிட்டது ட்வின் தொழில் நுட்பம்..!

இன்றைக்கு உலக மக்களின் தலையாய பிரச்சினை நீரிழிவு நோய்தான். அதிலும் டைப் 2 நீரிழிவு இன்று சாதாரணமாகி விட்டது. இந்தியாவில் அதிகமாக பாதிக்கும் இந்த குறைபாடு உள்பட பல்வேறு வகையாக நாள்பட்ட நோய்களைத் தீர்க்க வந்திருக்கிறது Whole Body Digital Twin (முழு உடல் டிஜிட்டல் ட்வின்). Whole Body Digital Twin (முழு உடல் டிஜிட்டல் ட்வின்) ™ என்பது ஒவ்வொரு தனி நபரின் மெட்டபாலிசத்துக்கான (metabolism) டிஜிட்டல் திட்டம். இது மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ அறிவியலுடன் கட்டமைக்கப் பட்டுள்ளது, இது டைப் 2 நீரிழிவு (Type 2 Diabetes) உட்பட நாள்பட்ட பிற நோய்களைத் (Chronic Metabolic Diseases) தடுக்க (prevent) மற்றும் சரி (reversal) செய்வதில் உதவி புரிகிறது. மருத்துவ பரிசோதனைகளில், 90% க்கும் மேற்பட்டவர்களுக்கு டைப் 2 நீரிழிவு சரி (reversal) செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 92% பேர் ட்வின் சிகிச்சைக்குப் பிறகு நீரழிவு நோய்க்கான மருந்துகள் எடுத்துக் கொள்வதை கைவிட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் சென்னை/ கோவை/ திருச்சி 07 அக்டோபர் 2021 : ட்வின் ஹெல்த் (TWIN HEALTH) நிறுவனமானது முழு உடல் டிஜிட்டல் ட்வின்™ (Whole Body Digital Twin) எனும் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்தியா மற்றும் அமெரிக்காவில் அதன் வளர்ச்சியை மேற்கொள்ள 140 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 1000 Cr) நிதி திரட்டியுள்ளது.

2018 இல் நிறுவப்பட்ட, ட்வின் ஹெல்த் (TWIN HEALTH) ஆனது முழு உடல் டிஜிட்டல் ட்வின்™ டெக்னாலஜியைக் கண்டுபிடித்து, தொடர்ச்சியாக மக்களுக்குச் சேவையாற்றிவருகிறது. இந்த தொழில்நுட்பம் நாள்பட்ட நோய்களைத் தடுக்க பேருதவியாற்றிவருகிறது.

Whole Body Digital Twin (முழு உடல் டிஜிட்டல் ட்வின்) ™ என்பது ஒவ்வொரு தனி நபரின் வளர்சிதைமாற்றத்தின் (metabolism) டிஜிட்டல் பிரதிநிதி. ஆக்கிரமிப்பு அல்லாத அணியக்கூடிய சென்சார்கள் (Non-invasive wearable sensors) மற்றும் சுய-அறிக்கை அம்சங்கள் மூலம் தினசரி சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான டேட்டா-களினால் (data) வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழு உடல் டிஜிட்டல் ட்வின் ஆனது ஊட்டச்சத்து, தூக்கம், சுவாசப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.இது, நோயாளிகள் மற்றும் அவர்களின் மருத்துவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, கல்லீரல் நோய் உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும், சரி செய்யவும் உதவுகிறது. “நாம் ஒவ்வொருவரும் அற்புதமான ஓர் உடலைப் பரிசாக பெற்றிருக்கிறோம். வாய்ப்பு கிடைத்தால், அது தன்னை தானே குணமாக்கும்.

முழு உடல் டிஜிட்டல் ட்வின் உங்களுக்காக உங்களுடன் வாழ்கிறது. உங்கள் உடலில் இருக்கும் மாற்றங்களைக் கண்டறிந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும். உங்களின் உடல் நலம் குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் தெளிவான பார்வையை உங்களுக்கு அளிக்கிறது” என்று கூறினார் ட்வின் ஹெல்த் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜஹாங்கீர் முகமது.

ஜஹாங்கீர் ஒரு தொடர் கண்டுபிடிப்பாளர், தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்ப முன்னோடி. 2000 ஆம் ஆண்டில் Kineto Wireless எனும் தொழில் நுட்பத்தை நிறுவினார், அதன்மூலம் மொபைல் ஃபோன்களில் WiFi தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினார். அவர் பின்னர் Jasper Technologies -ஐ ஒரு முன்னணி உலகளாவிய IoT தளமாக நிறுவிக் கட்டினார், இது சிஸ்கோவினால் $ 1.4 பில்லியனுக்கு (இன்றைய மதிப்பு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்) 2016 இல் வாங்கப்பட்டது.

இது குறித்து ஜஹாங்கீர் கூறும்போது, “முழு உடல் டிஜிட்டல் ட்வின் என் வாழ்நாள் கண்டுபிடிப்பாகும். மக்களின் வாழ்க்கையில் ட்வின் டெக்னாலஜியின் தாக்கம் ஒவ்வொரு நாளும் என்னை உற்சாகப்படுத்துகிறது மற்றும் ஊக்குவிக்கிறது” என்று கூறினார்.

டைப் 2 நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள், உடலின் மெட்டபாலிசத்தை எளிதில் உடைத்தெறிந்துவிடும். ஒவ்வொரு நபரின் உடலும் வித்தியாசமாக செயல்படுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட வகையில் சிகிச்சைகளை மேற்கொள்வது நிச்சயம் சவாலான விஷயம். முழு உடல் டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பமானது அதை சாத்தியமாக்குகிறது. ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட வகையிலான சிகிச்சை, துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் மேம்பட்ட மருத்துவ உதவிகளை வழங்குகிறது.

இதனால், நோயாளிகளை எளிதில் குணப்படுத்த முடியும்.முன்னரே சொன்னது போல் இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது உலகின் இரண்டாவது மிக அதிக எண்ணிக்கையாகும். 2045 க்குள், இது 13 கோடியாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்வின் இணை நிறுவனர் டாக்டர் மாலுக் முகமது பேசும்போது, “நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களால் இந்தியா வில் 20-ல் ஒருவர் இறக்கின்றனர். நீரிழிவு நோய் இந்தியா முழுவதும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தற்போதுள்ள சிகிச்சைகள் நோய்க்கான மூல காரணத்தை தீர்க்காது.

ட்வின் ஆனது நோய்க்கான வேர் வரை ஆராய்ந்து அதை சரிசெய்யும் பணியை மேற்கொள்கிறது. ட்வின் சேவையைப் பயன்படுத்தி, இந்தியாவின் முன்னணி நீரிழிவு நிபுணர்கள், உட்சுரப்பியல் நிபுணர்கள் மற்றும் MD மருத்துவர்கள் டைப் 2 நீரிழிவு நோயைச் சரிசெய்து வருகிறார்கள்.

ட்வின் ஹெல்த் நிறுவனத்தின் சிகிச்சையில் தொடர்ச்சியான குளுக்கோஸ் மானிட்டர்கள் (Continuous Glucose Monitors) மற்றும் உடற்பயிற்சி கடிகாரங்கள் (Fitness Watches) மற்றும் விரிவான இரத்த பரிசோதனைகள், மருத்துவர்களுடனான ஆலோசனைகள், சுகாதார பயிற்சியாளர்களின் தொடர் கவனிப்பு மற்றும் பல அம்சங்கள் அடங்கியுள்ளது. முழு உடல் டிஜிட்டல் ட்வின் ™ தொழில்நுட்பம் தனிநபரின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிக்கிறது மற்றும் மருத்துவர்கள் மற்றும் ட்வின் பயிற்சியாளர்கள் விரைவான நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.

அதோடு, சுலபமாக பயன்படுத்தக்கூடிய செயலியின் (mobile app) மூலம் நோயாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பு குழுவிற்கு சரியான நேரத்தில் வழிகாட்டுகிறது.

ட்விட் ஹெல்த் மருத்துவ ஆராய்ச்சி குழு டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாள்பட்ட நோய்களை சரிசெய்வதற்கான உலகின் முதல் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையை (RCT) மேற்கொள்கிறது. அந்த RCT டேட்டாவானது அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் (American Diabetes Association) நீரிழிவு நோய்க்கான இதழில் வெளியிடப்பட்டது.

பொதுவாக, நீரழிவு நோய்க்கான அளவீடானது HbA1c என்பதால் குறிப்பிடப்படும். இந்த அளவீடானது ட்வின் சிகிச்சையின் மூலம் சராசரியாக 3.1 புள்ளிகள் குறைந்து (8.7-லிருந்து), நோயாளிகள் நீரழிவு நோயிலிருந்து மீண்டுள்ளனர். 92% பேர் அனைத்து நீரிழிவு மருந்துகளையும் கைவிட்டுள்ளனர். அதோடு, ஒவ்வொரு நோயாளிகளின் சராசரி எடை குறைப்பு 9.1 கிலோ ஆகும்.

பத்ம ஸ்ரீ பேராசிரியர் சஷாங்க் ஜோஷி, ட்வின் ஹெல்த் நிறுவன தலைமை விஞ்ஞானி, ஆலோசகர் மற்றும் இந்திய நீரிழிவு அகாடமியின் தலைவர் பேசும்போது, “ஒரு விஞ்ஞானியாக, தற்போதைய RCT முடிவுகள் மற்றும் முழு உடல் டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பத்தால் நான் ஈர்க்கப்பட்டேன். இதன்மூலம் டைப் 2 நீரழிவு நோயை சரிசெய்ய முடியும் என்பது அறிவியல் மூலமாக நிரூபணமாகியுள்ளது.” என்றார்.

ட்வின் ஹெல்த் ஆராய்ச்சிக்காக ஐஐடி மெட்ராஸுடன் (IIT Madras) கூட்டணியை அமைத்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் நிறுவனர் பத்மஸ்ரீ பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா பேசும்போது, “ உலகின் நீரிழிவு நோயின் தலை நகரம் இந்தியா. இன்சுலின் போன்ற மருந்துகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், நோயாளியை முழுமையாக குணமாக்காது. இந்த மருந்துகள் பல ஆண்டுகளாக உடல்நிலையை மேசமடைய வைக்கிறது.

நீரிழிவு நோயை சரிசெய்ய புதிய தொழில் நுட்பத்துடன் ட்வின் ஹெல்த் கைகொடுக்கும். சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் விரிவான டேட்டா மூலம், ஒவ்வொரு நபரும் ஒருவரின் உடலைக் கவனமாகக் கண்காணிக்கலாம். அவர்களது ஆராய்ச்சியின் முடிவானது, மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றது.” என்று கூறினார்.

சீரிஸ்-சி நிதி திரட்டலில் (Series-C funding), செக்கோயா கேபிடல் இந்தியா (Sequoia Capital), ஐகோனிக் (ICONIQ), பெர்செப்ட்விட் அட்வைஸர், கார்னர் வென்ச்சர்ஸ், எல்டிஎஸ் இன்வெஸ்மெண்ட்ஸ், ஹெலீனா மற்றும் சோஃபினா ஆகிய முதலீட்டாளர்கள் இடம்பெற்றனர். “உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற இலக்குமிக்க நிறுவனர்கள் தேவை. ட்வின் ஹெல்த் ஆனது சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. ஜஹாங்கீரின் தொலைநோக்குப் பார்வை, இந்தியாவிற்கும் உலகத்திற்கும் ஒரு புதிய சுகாதார தொழில்நுட்ப கண்டுபிடிப்பினை பரிசாகத் தந்திருக்கிறது” என்று கூறினார்.

செக்கோயா இந்தியாவின் நிர்வாக தலைவர் மோகித் பட்னாகர். ட்வின் ஹெல்த் பற்றி நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும், ஆற்றல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆயுட்காலம் நீட்டிக்கவும், ட்வின் ஹெல்த் முழு உடல் டிஜிட்டல் ட்வின் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் இந்தியாவின் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. மேலும் அறிய, https://www.twinhealth.com ஐப் பார்வையிடவும்.