பிரைம் வீடியோ, ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த கிரவுண்ட் பிரேக்கிங் குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சிகளோடு வெளியிடப்படும் தேதியையும் அறிவித்தது
ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO இன் தயாரிப்பில் உருவான இந்த அதிரடி ஆக்சன் திரைக்காவியம் ஏப்ரல் 28 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்படுகிறது
கால்வர் சிட்டி, கலிபோர்னியா—பிப்ரவரி 27, 2023—மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அடிதடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஸ்பை த்ரில்லர் சீட்டடெல் தொடரின் பரபரப்பான இரண்டு எபிசோடுகள் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 28 அன்று வெளியிடப்பட்டு, அதைத் தொடர்ந்து மே 26 வரை ஒவ்வொருவருக்கும் வாரமும் ஒரு புதிய எபிசோடு பிரத்யேகமாக பிரைம் வீடியோவில் வெளியிடப்படுவதை அறிவிக்கும் ஃபர்ஸ்ட்-லுக் காட்சிகளை பிரைம் வீடியோ இன்று வெளியிட்டது. எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்களாக ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO மற்றும் ஷோ ரன்னராக டேவிட் வெயில் ஆகியோர் இணைந்து, மிகுந்த பொருட்செலவில் உருவான இந்த உணர்ச்சி மிகுந்த திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். மேலும் இதில் ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சீட்டடெல் வெளியிடப்படுகிறது
சீட்டடெல் பற்றி:
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நிழல் உலகை ஆண்டுக்கொண்டிருந்த ஒரு வலிமை மிக்க அதிகாரக் குழுவான மாண்டிகோரை இயக்கிக் கொண்டிருந்தவர்களால் -அனைத்து மக்களின் பாதுகாப்பையும், பத்திரத் தன்மையையும் நிலைநிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட- சிட்டடெல் எனும் இந்த சுதந்திரமான உலகளாவிய உளவு நிறுவனமானது, அழிக்கப்பட்டது, சீட்டடெல் வீழ்ச்சியின் போது உயர்நிலை உளவுத் துறை அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்) இருவரும் மயிரிழையில் உயிர் தப்பினாலும் அவர்களின் கடந்த கால நினைவுகள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுவிட்டது. அப்போதிருந்து தங்கள் கடந்த காலத்தை பற்றி எதுவும் அறியாதவர்களாக, புதிய அடையாளங்களோடு ஒரு புதிய வாழ்கைப் பயணத்தை மேற்கொண்டு மறைந்தே வாழ்ந்து வந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள் இரவு, மேசனின் உடன் பணியாற்றிய பணியாளர் பெர்னார்ட் ஆர்லிக் (ஸ்டான்லீ டுக்ஸி) ஒரு இக்கட்டான நிலையில் புதிய உலக அமைப்பு ஒன்றை நிறுவும் மாண்டிகோரின் முயற்சிகளை முறியடிக்க, மேசனின் உதவியை அவசரமாக வேண்டி, அவரைத் தேடி வருகிறார். மேசன் தன்னுடன் பணியுரிந்த பணியாளர் நதியாவையும் தேடிக் கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு இரகசியங்கள், பொய்கள், மற்றும் ஆபத்தான அதே சமயம் அழியாத கொழுந்துவிட்டு எரியும் காதல் உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட உறவுடனான தொடர்ந்த போராட்டத்தின் நடுவே மாண்டிகோரின் முயற்சிகளை தடுத்து நிறுத்தும் ஒரேயொரு பணியிலக்கை நோக்கி அந்த இரண்டு ஒற்றர்களும் உலகமெங்கும் சுற்றி வரச்செய்யும் அந்தப் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
கேன் ஆக ரிச்சர்ட் மேடன், நடித்திருக்கும் இந்தத் தொடரில் நதியா சிங்காக பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் , பெர்னார்ட் ஓர்லிக்காக ஸ்டான்லி டுசி, டாலியா ஆர்ச்சராக லெஸ்லி மான்வில்லே, கார்ட்டர் ஸ்பென்ஸாக ஓஸி இகிலே, அபே கன்ராய் ஆக ஆஷ்லே கம்மிங்ஸ்ஸும்வும், ஆண்டர்ஸ் சில்ஜே மற்றும் டாவிக் சில்ஜே ஆக ரோலண்ட் முல்லர், ஹென்ட்ரிக்ஸ் கான்ராய் ஆக கயோலின் ஸ்பிரிங்கால் ஆகியோரும் இன்னும் பலரும் நடித்திருக்கிறார்கள்.
அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO சார்பாக , AGBOக்காகஅந்தோனி ரூசோ, ஜோ ரூசோ, மைக் லரோக்கா, எஞ்சலா ரூசோ ஓட்ஸ்டாட் மற்றும் ஸ்காட் நீம்ஸ் ஆகியோர் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், டேவிட் வெயில் ஷோ ரன்னராகவும், நிர்வாக தயாரிப்பாளராகவும் செயல்பட்டு,சீட்டடெல் தயாரிக்கப்பட்டது. ஜோஷ் அப்பெல்பாம், ஆண்ட்ரே நெமெக், ஜெஃப் பிங்க்னர் மற்றும் ஸ்காட் ரோசன்பெர்க் ஆகியோர் மிட்நைட் ரேடியோவின் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றினர். நியூட்டன் தாமஸ் சைகல் மற்றும் பேட்ரிக் மோரன் ஆகியோரும் நிர்வாக தயாரிப்பாளர்களாக பங்காற்றினர்.
***
சீட்டடெல் தொடர்கிறது –
ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோர் நடிப்பில் ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில் தோன்றும் சீட்டடெல் உலகளாவிய கிளையுரிமை அறிமுகத்தின் ஒரு திருப்புமுனையாகும். ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO நிர்வாகத் தயாரிப்பில் உருவான சீட்டடெல் மற்றும் அதன் அடுத்தடுத்த தொடர்கள் ஒன்றோடொன்று இணைந்த கதைக் களத்துடன் உலகம் முழுவதும் பயணிக்கின்றன.சீட்டடெலின் ஒவ்வொரு தொடரும் உள்ளூரில் உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு, உள்நாட்டிலேயே படமாக்கப்பட்டது, மற்றும் தனித்துவமான உலகளாவிய கிளையுரிமையை உருவாக்கும் வகையில் தலைசிறந்த திறமை மிக்க நடிகர்கள் நடித்துள்ளனர். .இத்தொடர் முறையே இத்தாலி மற்றும் இந்தியாவில் மாடில்டா டி ஏஞ்சலிஸ், வருண் தவான் மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோர் நடிப்பில் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது,
அபிஷியல் பிரைம் வீடியோ சோஷியல்
ட்விட்டர்: @CitadelOnPrime
இன்ஸ்டாகிராம் : @CitadelOnPrime
ஃபேஸ் புக் : @CitadelOnPrime
ஹேஷ்டாக்: #CitadelOnPrime