டாக்டர் ஆபரேஷன் சக்ஸஸ்!

டாக்டர் ஆபரேஷன் சக்ஸஸ்!

  இயக்கம் - நெல்சன் நடிப்பு - சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு, டோனி, கதை - வாழ்க்கையில் பிராக்டிகலாக ஃபர்ஃபெக்டாக இருக்கும் ராணுவ டாக்டரை அவருக்கு பார்த்த பெண் பிடிக்கவில்லை என நிராக்கரித்து விடுகிறார். அந்தப்பெண் வீட்டில் ஒரு பெண் குழந்தை கடத்தப்பட, அந்த குழந்தையை கண்டுபிடிக்க அந்த குடும்பத்துடன் இணைந்து நம்பமுடியாத ஆக்சன் ஆபரேஷன் நடத்துகிறார் டாகடர். வெகு நாட்கள் கழித்து தியேட்டரில் ரசிகர்கள் விசில் சத்தம் பறக்க, என்ஞாய் செய்து பார்க்கும் படமாக வந்திருக்கிறது டாக்டர். டார்க் காமெடியில், க்ரைமை சரிவிகிதத்தில் கலந்து, படத்தின் திரக்கதையில் ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யப்படுத்துகிறார் நெல்சன். தன் முதல் படத்தில் அங்கங்கே தடுமாறியவர், இந்தப்படத்தில் நிதானமாக சிக்ஸர் விளாசியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதை அமைத்த விதமும், நம்ப முடியாததாக இருந்தாலும் ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது. படத்தின் காட்சிகளில் நம்மையும் ஒன்ற வைத்து விடும் மேஜிக் அவரிடம் இருக்கிறது. படம்…
Read More
விரைவில் திரைக்கு வரவிருக்கும் டாக்டர் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

விரைவில் திரைக்கு வரவிருக்கும் டாக்டர் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“டாக்டர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள "டாக்டர்" திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தை Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரித்துள்ளார். உலகமெங்கும் அக்டோபர் 9 ஆம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தது. இந்நிகழ்வில் நடிகர் சுனில் ரெட்டி பேசியதாவது.... இந்தப்படத்தில் ரௌடியாக நடிக்கிறாயா என்று இயக்குநர் கேட்டார். நான் தயக்கத்தில் தான் ஓகே என்றேன். தாடி வளர்க்க சொன்னார் வளர்த்துக்கொண்டே இருந்தேன். படத்தில் மிக அழகாக என்னை பயன்படுத்தியுள்ளார். நான் பார்க்க தான் டெரர், உண்மையில் மிக பயந்த சுபாவம் தான். இந்தப்படம் ஒரு அழகான பொழுதுபோக்கு படம், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. நடிகர் ரெடின் பேசியதாவது... இந்தப்படம் மிக கலகலப்பாக…
Read More
“டாக்டர்” திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகப் போகுது!

“டாக்டர்” திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகப் போகுது!

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான  சிவகார்த்திகேயன்  நடித்த “டாக்டர்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் வெளியீடு குறித்து பல தகவல்கள் பரவிய நிலையில், KJR Studios மற்றும் SK Productions ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில், படம் வெளியீடு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. “டாக்டர்” படம் வரும் அக்டோபர் 2021 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் கூறியதாது… “டாக்டர்” திரைப்படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்த திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தமிழில் புதுமையான, இது போன்ற ஒரு ப்ளாக் காமெடி திரைப்படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கோவிட் 19 எங்கள் வெளியீட்டு திட்டமிடல்களை மாற்றியது. “டாக்டர்” திரைப்படம் முழுமை யாக முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்ததால், அந்த காலகட்டத்தில் பல்வேறு OTT தளங்கள்…
Read More