ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ‘காட்டேரி’ ஷூட்டிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!

0
268

ஹாஸ்யமும்ம் த்ரில்லரும் மிக்ஸ் ஆன ஒரு கதையை லாஜிக் இல்லாமல் மேஜிக்காகக் காட்டியிருந்த படமான ‘யாமிருக்க பயமே’ படத்தின் இயக்குநர் தீகே இயக்கவிருக்கும் ‘காட்டேரி’ திரைபப்டத்தில் 4 முன்னணி ஹீரோயின்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.

வைபப் நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தில் ஹன்சிகா, ஓவியா போன்ற நடிகைகள் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 4 ஹீரோயின்ஸ் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பாஜ்வா, மனலி ரத்தோட் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து சோனம் பாஜ்வா, “படத்தில் நடிக்கும் மூன்று நாயகிகளுக்கும் சமமான கேரக்டர். யாரும் முதல் ஹீரோயின், இரண்டாவது ஹீரோயின் என்று இல்லை. ஜூன் மாதம் எனது காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டிலும் நடைபெறவுள்ளது” என்று கூறியுள்ளார்.

இப்படத்தில் பீரியட் போஷன் ஒன்றும், மாடர்ன் போஷன் ஒன்றும் இடம்பெறவிருப்பதாகவும், 4 ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இருக்கும் என்றும் இயக்குநர் தீகே தெரிவித்துள்ளார். கோலிவுட் ஸ்ட்ரைக் முடிந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று துவங்கி நடைபெற்று வருகின்றன.

இப்படம் ஹாரர் படம் இல்லையென்றும், இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். இப்படத்தின் சில காட்சிகள் வனப்பகுதியிலும், சில காட்சிகள் வெளிநாடுகளிலும் படமாக்கப்படவுள்ளது. 90% காட்சிகள் இரவு நேரத்திலேயே எடுக்கப்படும் என்றும் இயக்குநர் தீகே தெரிவித்துள்ளார்.