இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர். அதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள இந்த தொடர், பிரத்தியேகமாக MX Original Series-ல் ஜனவரி 22-ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது.
“ உன்னால் உன் விதியை தேர்ந்தெடுக்க முடியும் , ஆனால் உன் எதிரிகளை உன்னால் தேர்ந்தெடுக்கமுடியாது. “ இது இரண்டு இளைஞர்களின் கதை, வாழ்வின் தொடக்கத்தில் சரியான பாதையில் ஒன்றாக ஆரம்பித்த அவர்கள், இறுதியில் விதிக்கும், கடமைக்குமான இரத்தக்களரியான போரில், அவர்கள் கொடுக்கும் விலை என்ன, என்பதே இதன் கதை. ஆக்சன் மற்றும் இதன் க்ரைம் கதையமைப்பும், வலுவான இரண்டு கதாபாத்திரங்களின் பின்னணியும், சிறந்த பொழுதுபோக்கு அம்சத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் இந்தியாவின் சிறந்த பொழுதுபோக்கு ஆப் ஆன MX Player-ல் விரைவில் வெளியாக உள்ள “குருதி களம்” தொடர் பொழுதுபோக்கிற்கான சிறந்த தொடராக இருக்கும்.
Applause Entertainment மற்றும் Arpad Cine Factory இணைந்து தயாரித்துள்ள “குருதி களம்” – தொடர், தனுஷ், கே மோகன், விக்னேஷ் கார்த்திக், கிஷோர் சங்கர் மற்றும் கவிராஜ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். 13 அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரை ராஜ பாண்டி மற்றும் தனுஷ் ஆகிய இருவர் இயக்கியுள்ளனர். இந்த தொடர் MX Player-ல் ஜனவரி 22 வெளியாகவுள்ளது.
இந்த தொடர் சென்னையில் உள்ள இரண்டு போட்டி கும்பல்களைச் சுற்றி கட்டமைக்கப் பட்டுள்ளது, அவர்கள் வன்முறையின் மூலம் சென்னையை எப்படி ஆளுகிறார்கள் என்பதே கரு. ஒரு நேர்மையான இளைஞன் விஜய்( சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார்) ஒரு முடிவில்லாத சக்தி வளையத்திற்க்குள் இழுக்கப்படுகிறான், காவல் துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்ற அவன் கனவு, இந்த வன்முறையால் நிகழாமல் போகிறது. அவன் மீண்டும் எழுந்து, அவனது பெரும் எதிரி கூட்டமான குமாரில்( அசோக் குமார் நடித்துள்ளார்) தொடங்கி, தனது முன்னால் நண்பனான சப்-இன்ஸ் பெக்டர் அருண் ( சவுந்தர் ராஜா நடித்துள்ளார்) வரை பழிக்குபழி வாங்குகிறான்.
இத்தொடர் குறித்து இயக்குநர் ராஜபாண்டி கூறியதாவது…
குற்றங்களை அடிப்படையாக கொண்ட கதைகள் தற்போதைய காலத்தில் ரசிகர்கள் அதிகம் விரும்புபவயாக இருக்கின்றன. இந்த இணைய தொடர் துரோகம், பழிவாங்கல் மற்றும் தியாகம் செய்தலுக்கு இடையிலான பெரும் உணர்வுகளை, பொழுதுபோக்கு அம்சத்துடன் கலந்து சொல்லும் வகையில் ரசிகர்கள் விரும்பும்படி இருக்கும்.
மேலும் தனுஷ் கூறியதாவது…
தொடர் பார்வையில் அனைத்து அத்தியாயங்களையும் பார்க்கும் ஆர்வத்தை தரும் வகையில் இந்த தொடர் உள்ளது. மிக அழகாக அத்தனை ஆக்சன் மற்றும் உணர்வுகளை அட்டகாசமாக 13 அத்தியாயங்களுக்குள் தந்திருக்கும் நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றி.
https://www.youtube.com/watch?v=3gus6xgKglQ&feature=youtu.be
பரபரப்பான இந்த இணைய தொடரில் நடிகர் மாரிமுத்து, வின்செண்ட் அசோகன், ஶ்ரீகாந்த், சனம் ஷெட்டி, ஈடன் குரியகோஷ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இணைய தொடரை முற்றிலும் இலவசமாக 22 ஜனவரி 2021 முதல் MX Player ல் காணலாம்
ஆப்பை இங்கு தரவிறக்கம் செய்ய
Web: https://www.mxplayer.in/