ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார். . புத்தாண்டு ரஹ்மானை பொறுத்த வரை மிகுந்த உற்சாகமான வருடம் என்று தான் சொல்லவேண்டும் .
இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ரஹ்மான் கதா நாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது . மேலும் அஹம்மத் இயக்கத்தில் அர்ஜுன், ‘ஜெயம்’ ரவி ஆகியோருடன் இணைந்த படமான ‘ ஜன கன மன ‘, விஷாலுடன் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழ் ,தெலுங்கு பிசியாக உள்ள ரஹ்மான் மலையாளத்தில் புதுமுக இயக்குனர் சார்ல்ஸ் ஜோசபின் ‘ சமரா ‘ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் காஷ்மீரில் ஆரம்பமாகிறது. 2021 ரஹ்மானுக்கு பிசி ஆண்டாக அமைகிறது .