சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்பட ரிலீஸ் டேட் இதோ!

நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது தெரிந்த விசயம்தான்..!  இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கிறது.. ஏற்கெனவே சூர்யா தயாரிப்பில் உருவான ‘பசங்க-2’ படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோல் மட்டுமே செய்திருந்தார். ஆனால் இப்போது பாண்டிராஜின் இயக்கத்தில் நாயகனாகவே நடிக்கவிருக்கிறார். இது பாண்டிராஜ் இயக்கும் 10-வது திரைப்படமாகும்.

ஏற்கெனவே ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய ஞானவேலின் இயக்கத்தில் 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்திலும் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

இதற்கெல்லாம் முன்னதாக, மின்னல் வேகத்தில் வரும் டிசம்பர் மாதம் தொடங்குகின்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதிக்குள் முடிந்து விடுமாம்.

2021 தமிழ்ப் புத்தாண்டு அன்று இந்தப் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.