Latest Posts

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய படம் மட்டி!

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப் பட்டுள்ள படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ்...

அன்பிற்கினியாள் பட பிரிமீயர் ஷோ அப்டேட் நியூஸ்!

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண் பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம்...

இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்!

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து...

மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகளை விவரிக்கும் ஒரு தமிழ்த் திரைப்படம் தயாராகப் போகுது!

இந்திய சினிமாக்களில் சில திரைப்படங்களில் மனித உரிமைகள் ஆணையத்தின் மாண்பினையும் அதன் செயல்பாடுகளையும் பாராட்டி வசனங்களும், காட்சிகளும் அவ்வப்போது வந்து செல்வதுண்டு. ஆனால், முதன்முறையாக முழுக்க முழுக்க மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகளை மட்டுமே மையமாக வைத்து ஒரு தமிழ்த் திரைப்படம் உருவாகிறது. திரைப்படக்கல்லூரி மானவரான ராஜா ஶ்ரீபத்மநாபன் கதை, திரைக்கதை வசனத்தை எழுதி இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மதுரை சுற்று வட்டாரத்தில் நடக்கவிருக்கிறது.

நாட்டில் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல் குற்றங்கள் நடந்து நெஞ்சை பதறவைக்கும் போதெல்லாம் நீதி மன்றமும், மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து (SUOMATO) வழக்கை விசாரிப்பது நடக்கிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறும்போது இப்படி தாமாக முன்வந்து விசாரிக்கும் போக்கை அதிகமாகக் காணமுடிகிறது. இது ஒருவகையில் நீதித்துறை, மனித உரிமைகள் அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக அமைகிறது.அந்தவரிசையில், ஒரு பெண்ணுக்கு நேரும் மனித உரிமை மீறல் மீதான சுயமான விசாரணையைப் பின்புலமாகக் கொண்டதுதான் இத்திரைப்படமும்.

படத்தின், நாயகிக்கு நேரும் அவலத்தை தாமாக முன்வந்து விசாரிக்கும் மனித உரிமைகள் ஆணையம், நீதியை நிலைநாட்டி மக்கள் மத்தியிலும் பாதிக்கப்பட்ட பெண் முன்பும் மாண்புடன் உயர்ந்து நிற்பதைப் பற்றிய கதைதான் இது. இத்திரைப்படத்தில் நாயகனாக ‘சாலையோரம்’ திரைப்படத்தில் நடித்த ராஜவர்மன் நாயகனாகவும், கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற மதுரையைச் சேர்ந்த அம்சரேகா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷர்மிளி, சென்றாயன், வையாபுரி, வினோதினி, மீரா இன்னும் சில புது முகங்களும் நடிக்கின்றனர்.


ரஃகிட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு வேலுச்சாமி இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பாளராக முத்துக்கோட்டீஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் இருவரும் திரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு வாரென் vj சார்லி இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் சந்துரு எழுதுகிறார். கலை: சம்பத் திலக், தயாரிப்பு நிர்வாகம், செங்குட்டுவன். பிஆர்ஓ-வாக நிகில்முருகன் செயல்படுகிறார்.

Latest Posts

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய படம் மட்டி!

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப் பட்டுள்ள படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ்...

அன்பிற்கினியாள் பட பிரிமீயர் ஷோ அப்டேட் நியூஸ்!

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண் பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம்...

இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்!

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து...

Don't Miss

பாலுமகேந்திரா – மறக்க முடியாத படைப்பாளி!

இலங்கையில் பிறந்தவருக்கு இயக்குநர்கள் டேவிட் லீன், சத்யஜித்ரே ஆகியோர்தான் மானசீக குரு. இருந்தாலும் போட்டோகிராபியே முதல்காதல் என்பதால் பயணம் அப்படி துவங்கியது.. எழுபதுகளின் துவக்கத்தில் மலையாள படங்களை ஒளிப்பதிவு செய்தவருக்கு, மிகப்பெரிய அளவில்...

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்!

ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகிய வற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத்...

டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’?

டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் 'நீ சுடத்தான் வந்தியா?' .காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்...

காமத்தை மையமாக்கி உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் -“SSHHH”!

காமத்தை மையமாக வைத்து உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “SSHHH”, தமிழில் முதல் முறையாக மாறுப்பட்ட கோணத்தில் உருவாகும் ஆந்தாலஜி திரைப் படமான “SSHHH” படத்தின், சமீபத்திய அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் ஆவலை...

Lyca வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” பட படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சிவாகர்த்திகேயன் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகும் “டான்” படத்தின் படப்பிடிப்பு இன்று 2021 பிப்ரவரி 11 கோயம்புத்தூரில் துவங்கியது. படத்தின் அனைத்து நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழுவினர் இதில் பங்கு கொண்டனர்....

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.