06
Nov
இந்திய சினிமாக்களில் சில திரைப்படங்களில் மனித உரிமைகள் ஆணையத்தின் மாண்பினையும் அதன் செயல்பாடுகளையும் பாராட்டி வசனங்களும், காட்சிகளும் அவ்வப்போது வந்து செல்வதுண்டு. ஆனால், முதன்முறையாக முழுக்க முழுக்க மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகளை மட்டுமே மையமாக வைத்து ஒரு தமிழ்த் திரைப்படம் உருவாகிறது. திரைப்படக்கல்லூரி மானவரான ராஜா ஶ்ரீபத்மநாபன் கதை, திரைக்கதை வசனத்தை எழுதி இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மதுரை சுற்று வட்டாரத்தில் நடக்கவிருக்கிறது. நாட்டில் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல் குற்றங்கள் நடந்து நெஞ்சை பதறவைக்கும் போதெல்லாம் நீதி மன்றமும், மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து (SUOMATO) வழக்கை விசாரிப்பது நடக்கிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறும்போது இப்படி தாமாக முன்வந்து விசாரிக்கும் போக்கை அதிகமாகக் காணமுடிகிறது. இது ஒருவகையில் நீதித்துறை, மனித உரிமைகள் அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக அமைகிறது.அந்தவரிசையில், ஒரு பெண்ணுக்கு…