ஜெ. வாழ்க்கையை மையமா வச்சு தயாராகும் ‘தலைவி’ வளர்கிறார்!

கங்கனா நடிப்பில் உருவாகி வரும் படம் தலைவி. விஜய் டைரக்‌ஷனில் உருவாகி வரும் இப்படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கேரக்டரில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.

ஜெ. வாரிசு என்று ஐகோர்ட்டால் அங்கீகரிக்கபட்ட தீபாவின் தடை கோரலையும் மீறி உருவாகும் இந்தத் தலைவி படத்திற்காக தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார் கங்கனா. அது மட்டுமின்றி பாரதநாட்டியம் ஆடவும் கற்று கொண்ட அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரதநாட்டிய உடையில் எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். அது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி இருந்துச்சு. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.

ஜெயலலிதா ரோலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை 10 கிலோ வரை அதிகரித்துள்ளார் கங்கனா.அது மட்டுமின்றி அவர் ஜெயலலிதா போல தோற்றமளிப் பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போடப்படுகிறது. அதற்காக கங்கனா அமெரிக்காவுக்கு சென்று prosthetic லுக் டெஸ்ட் எடுத்தார் என்றும் செய்திகள் தெரியவந்துச்சு. ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த அப்படத்தில் பணியாற்றுகிறார். அவர் Blade Runner, Captain Marvel போன்ற பல படங்களில் பணியாற்றியவராக்கும்.

சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் இசை பற்றி ட்விட்டர் வாசிகளுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசியவர், படத்தின் இசை அதிகம் பேசப்படும். ரெட்ரோ காலத்து இசை பயணம் செய்தால் போல் இருக்கும். இசை ஜாம்பவான் MSV அவர்களின் பாடல்கள் போல் அமைந்துள்ளது என தெரிவிச்சிருந்தார்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் திரைப்பயணம் முடிந்து அரசியல் பயணம் கொண்ட முக்கிய காட்சிகளை இந்த கட்டத்தில் படமாக்கி யுள்ளனர். இத்துடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்பதும் தெரிய வந்து உள்ளது. ஆனால் தலைவி புரொடக்‌ஷன் தரப்பில் இருந்து இப்போ வந்த தகவல்படி இந்த  ஷெட்யூல்ட் ஷூட் மட்டுமே முடிஞ்சிருக்குது ..இன்னும் கொஞ்சம் படமாக்க வேண்டியதிருக்குதாம்

இந்த படம் ஓடிடி-ல் வெளியாகக்கூடும் என்று சமீபத்தில் வதந்தி கிளம்பிய நிலையில், தலைவி திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெளிவு படுத்தி இருக்காய்ங்க