நடிகர் ஜீவா பிடித்த சிகரெட் ! ஹோட்டலில் தீ அலாரம்!

நடிகர் ஜீவா 83 பட ஷீட்டிங்கில் கலந்து கொண்ட போது, சிகரெட் பிடித்தே மொத்த ஹோட்டலையும் அலாரமடிக்க வைத்து காலி செய்திருக்கிறார்.

1983 கிரிக்கெட் உலககோப்பையை வென்ற தருணத்தை மையமாக வைத்து உருவான பாலிவுட் படத்தில் நடிகர் ஜீவா ஶ்ரீகாந்த் பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் அனைத்து மொழிகளிலும் பெரு வெற்றி பெற்றிருக்கிறது இந்தப்படத்தின் ஷூட்டிங்கின் போது லண்டனில் ஒரு ஹோட்டலி படக்குழு தங்கியுள்ளது. அங்கே தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதை குறித்து நடிகர் ஜீவாவே இரு பேட்டியில் கூறியதாவது…
83 பட ஷீட்டிங்கில் பண்ண கலாட்டா
எக்கசக்கமாக இருக்கு. லண்டன் போன மொத நாளே ஹோட்டல் மொத்தத்தையும் காலி பண்ணி பெரிய கலாட்டா நடந்தது. முதல் நாள் ஷீட்டிங் எல்லோரும் ஹோட்டல் வந்தப்புறம், நான் அங்க இருந்த டீமோட சேர்ந்து ரிகர்சல் பண்ணேன். படத்துல ஒரு சீன் வரும் ஶ்ரீகா தொடர்ந்து சிகரெட் பிடிக்கிற மாதிரி, அந்த காட்சிக்காக டீமோட சேர்ந்து சிகரெட் பிடிக்க அந்த புகையால ஹோட்டல்ல அலாரம் அடிச்சு, 11 மாடில இருந்து எல்லோரையும் காலி பண்ணிட்டாங்க அப்புறம் மெதுவா இயக்குநர் கபீர் சார்ட நாங்க தான் காராணம்னு சொன்னோம். இந்த மாதிரி படம் முழுக்க கலாட்டா நடந்துட்டே தான் இருந்தது. என்று கூறியிருக்கிறார்.