சூரரைப் போற்று ரிலீஸ் தள்ளி போச்சு!- ஏன்? சூர்யா விளக்கம்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது.

எனவே ஓடிடி அமேசானில் இந்த படத்தை வெளியிட முடிவு செய்து அக்டோபர் 30ல் ரிலீஸ் என அறிவித்தார் சூர்யா.

சூர்யாவின் இந்த முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சூர்யா தன் முடிவை மாற்றவில்லை.

இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு என தெரிவித்து ரசிகர்களுக்கு விளக்க கடிதம் கொடுத்துள்ளார் சூர்யா.

இதோ சூர்யா-வின் விளக்கக் கடிதம்…