சூர்யா, விஜய் சேதுபதி படங்களுடன் மோதும் ‘தி மஸ்கிட்டோ பிலாசஃபி’

சூர்யா, விஜய் சேதுபதி படங்களுடன் மோதும் ‘தி மஸ்கிட்டோ பிலாசஃபி’

வாழ்க்கையை உள்ளபடி அப்படியே காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட படம் The Mosquito Philosophy. தற்போது 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்படம் நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப் படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ளது. அப்பட்டமான நிதர்சனத்தை உள்ளடக்கிய இப்படம் காலங்காலமாக தமிழ் சினிமாவில் வேரூன்றியுள்ள புனைவுக் கதை சொல்லல் வடிவத்துடன் மோதுவது அனைவரின் எதிர்பார்ப்பினையும் கூட்டியுள்ளது. தன் குறுகிய திரை நேரத்தையும் குறைந்த பட்ஜெட்டினையும் சுமந்தபடி தமிழ் சினிமாவின் பிரமாண்டங்களுக்கு இடையே இச்சிறிய கொசுவின் தத்துவம் பறக்கவுள்ளது. இத்திரைப்படம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு எடுக்கப்பட்டது என்று சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை சுயாதீன விழாவில் (IFFC) இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே தமிழ் சினிமாவின் முதல் “Mumblecore ” என்னும் வகையறாவை சார்ந்த படம் எனக் கருதப்படுகின்றது. மேலும் “Dogme 95 ”…
Read More
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ -ஆஸ்கர் குழுவினரை கவருமா?

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ -ஆஸ்கர் குழுவினரை கவருமா?

இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் 'சூரரைப் போற்று'. சூர்யா வின் அசுரத்தமான நடிப்பு, அப்பர்னாவின் எதார்தம், சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது. தற்போது 'சூரரைப் போற்று' படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெறவேண்டும்.…
Read More
மிகவும் மகிழ்ச்சி – சூரரைப் போற்று ரிலீஸ் குறித்து சூர்யா!

மிகவும் மகிழ்ச்சி – சூரரைப் போற்று ரிலீஸ் குறித்து சூர்யா!

வாழ்நாள் திரைப்படமான அமேசானின் சூரரைப் போற்று வெளியீட்டை முன்னிட்டு ஒரு விசேஷ போஸ்டருடன் சூர்யா தனது ரசிகர்களை கவுரவித்தார் ‘சிம்ப்ளி ஃப்ளை’ என்ற புத்தகத்தின் கற்பனை வடிவமான, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் திரைப்படமான சூரரை போற்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் வெளியாகும் வேளையில், ஒரு விசேஷ போஸ்டரை சூர்யா மிக உயரமான இடத்திலிருந்து வெளியிட்டார். ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனும், ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனை செய்த விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனருமான கி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வைப் போலவே இப்படத்தின் நம்பிக்கையும் அற்புதமான உறுதியால் நிரப்பட்டு, சாத்திய மில்லாததை சாத்தியமாக்கியுள்ளது. இதை முன்னெடுத்துக் கொண்டு செல்லும் வகையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்துக்காக தங்கள் அன்பையும் ஆதரவையும் பொழிந்த சூர்யா ரசிகர்களுக்கு சமர்ப்பணமாக ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் அற்புதமான ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பொழுதுபோக்குத் துறை வரலாற்றிலேயே முதன்முறையாக கடல் மட்டத்தில் இருந்து 34000 அடி…
Read More
நிச்சயமாக இந்த ’சூரரைப் போற்று‘ஒரு ப்ளாக் பஸ்டர் பயணம்- சூர்யா !

நிச்சயமாக இந்த ’சூரரைப் போற்று‘ஒரு ப்ளாக் பஸ்டர் பயணம்- சூர்யா !

"தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்"- அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த சில முக்கிய தகவல்களை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளியிட்டது. சூரரைப் போற்று தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவலின் ஒரு அங்கமாக, 200க்கும் அதிகமான நாடுகளில் உள்ள அனைத்து ப்ரைம் சந்தாதாரர்களுக்காக இப்படம் வரும் நவம்பர் 12 முதல் வெளியாகிறது. ஆக்‌ஷன் டிராமா திரைப்படமான சூரரைப் போற்று படத்தில் சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது குறைந்த விலை விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான, கேப்டன். ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை பற்றிய…
Read More
சூரரைப் போற்று படத்துக்கு என்ஓசி கிடைப்பதில் ஏன் லேட்? – சூர்யா பேட்டி!

சூரரைப் போற்று படத்துக்கு என்ஓசி கிடைப்பதில் ஏன் லேட்? – சூர்யா பேட்டி!

ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவி பிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர் பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன் முறையாக ‘சூரரைப் போற்று’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. அது இதோ : ‘சூரரைப் போற்று’ படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து..? சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட சில படப் பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள்…
Read More
சூரரைப் போற்று ரிலீஸ் தள்ளி போச்சு!- ஏன்? சூர்யா விளக்கம்!

சூரரைப் போற்று ரிலீஸ் தள்ளி போச்சு!- ஏன்? சூர்யா விளக்கம்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. எனவே ஓடிடி அமேசானில் இந்த படத்தை வெளியிட முடிவு செய்து அக்டோபர் 30ல் ரிலீஸ் என அறிவித்தார் சூர்யா. சூர்யாவின் இந்த முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சூர்யா தன் முடிவை மாற்றவில்லை. இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு என தெரிவித்து ரசிகர்களுக்கு விளக்க கடிதம் கொடுத்துள்ளார் சூர்யா. இதோ…
Read More