Latest Posts

குஞ்சுமோன் & ஷங்கர் உருவாக்கிய ‘ஜென்டில்மேன்’ – கொஞ்சம் பிளாஷ் பேக்!

28 வருசத்துக்கு முன்னாடி ரிலீஸாகி இன்னிக்கும் நினைவில் நிற்கும் ஜென்டில்மேன் - சில நினைவுகள் By கட்டிங் கண்ணையா தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரா இன்னிக்கும் இருக்கும் டைரக்டர் ஷங்கர் இயக்கிய முதல்...

டேக் டைவர்ஷன்’ படத்தின் பர்ஸ்ட்லுக்கைப் பார்த்துப் பாராட்டிய பிரபலங்கள்!

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் 'டேக் டைவர்ஷன்' . இப்படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக்...

ஜெய் பீம் நாயகன் சூர்யா விரைவில் அரசியலுக்கு வருகிறார்!

இன்றைக்கு பிறந்த தினம் கொண்டாடும் சூர்யா நடிக்கும் ஒரு பட டைட்டில் ஜெய் பீம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை ஒட்டி நம் கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் ஜெய் ஹிந்துக்கு முன்பே...

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய OTT படம்!

2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ. ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித் துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது.

ZEE5 இந்த வருடத்தின் அடுத்த படைப்பாக, வைபவ் – வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை வழங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், ”OTTல் இது எனது முதல் படம். மிகச்சிறந்த முறையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து அனைவரும் அற்புதமாக நடிக்கிறார்கள். வைபவ், வாணிபோஜன், கருணாகரன் மற்றும் என் நண்பர் M.S.பாஸ்கர் ஆகியோருடன் இப்படத்தில் கை கோர்ப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி’’ என்றார்.

நடிகர் வைபவ் கூறுகையில், ” ‘லாக்கப்’, ‘டானா’, ‘கப்பல்’ போன்ற படங்களுக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தின் மூலம் ZEE5 உடனான நட்பு தொடர்கிறது. இந்த நகைச் சுவை படத்தில் இதுவரை நான் ஏற்றிராத சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். குடும்பமாக அனைவரும் ரசித்துப் பார்க்கும்படி எடுக்கப்படும் இப்படத்தில் இயக்குநர் ராதாமோகன், வாணிபோஜன், கருணாகரன், M.S.பாஸ்கர் ஆகியோருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

நடிகை வாணி போஜன் கூறுகையில், ” ‘ZEE5ன் ‘லாக்கப்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் வைபவ் உடன் இணைந்து நடிக்கிறேன். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு படம். நகைச்சுவை மிகுந்த இப்படத்தில் பெண்கள் குறிப்பாக இல்லத்தரசிகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன். ராதாமோகன் சார், M.S.பாஸ்கர் சார், கருணாகரன் ஆகியோருடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது.”

நடிகர் M.S.பாஸ்கர் கூறுகையில், ‘’இயக்குநர் ராதாமோகன் என்று சொல்வதை விட அவர் என் சகோதரர், என் நலனில் அக்கறை செலுத்துபவர், என்னை ரசிப்பவர், ரசித்துப் பல கதாபாத்திரங்களை உருவாக்குபவர், என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவரோடு ‘அழகிய தீயே’ படத்தில் இணைந்தேன். அதைத் தொடர்ந்து ‘மொழி’, ‘பிருந்தாவனம்’, ‘காற்றின் மொழி’ இப்படிப் பல படங்களில் நடித்த எனக்கு, இந்த படத்திலும் அவருடன் இணைய வாய்ப்பளித்திருக்கிறார். மத்த படங்கள் போல் இதிலும் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பார் என்று அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

நடிகர் கருணாகரன் கூறுகையில், ”நான் சமீபத்தில் கேட்ட கதைகளில் இப்படத்தின் கதை மிகவும் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருந்தது. ‘உப்பு கருவாடு’ படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் ராதாமோகனுடன் இணைவதில் மகிழ்ச்சி. அதே சமயம் வைபவ், M.S.பாஸ்கர், வாணிபோஜன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதிலும் சந்தோஷம். இப்படத்தின் மூலம் அனைவரையும் மகிழ்விக்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
படத்தொகுப்பு – கே.எல்.பிரவீன்
இசை – பிரேம்ஜி
கலை – கதிர்

Latest Posts

குஞ்சுமோன் & ஷங்கர் உருவாக்கிய ‘ஜென்டில்மேன்’ – கொஞ்சம் பிளாஷ் பேக்!

28 வருசத்துக்கு முன்னாடி ரிலீஸாகி இன்னிக்கும் நினைவில் நிற்கும் ஜென்டில்மேன் - சில நினைவுகள் By கட்டிங் கண்ணையா தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரா இன்னிக்கும் இருக்கும் டைரக்டர் ஷங்கர் இயக்கிய முதல்...

டேக் டைவர்ஷன்’ படத்தின் பர்ஸ்ட்லுக்கைப் பார்த்துப் பாராட்டிய பிரபலங்கள்!

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் 'டேக் டைவர்ஷன்' . இப்படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக்...

ஜெய் பீம் நாயகன் சூர்யா விரைவில் அரசியலுக்கு வருகிறார்!

இன்றைக்கு பிறந்த தினம் கொண்டாடும் சூர்யா நடிக்கும் ஒரு பட டைட்டில் ஜெய் பீம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை ஒட்டி நம் கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் ஜெய் ஹிந்துக்கு முன்பே...

Don't Miss

பரத் & வாணி போஜன் நடிக்கும் புதிய படம்: ஆக்சஸ் ஃபிலிம் தயாரிக்கிறது!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும், அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் Axess Film Factory நிறுவனம் தனது அடுத்த படத்தினை...

“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Scarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Black Widow” படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. மார்வல் சூப்பர்ஹீரோ Natasha Ramanoff  கதாப்பாத்திரத்தின் முன்கதையை, அந்த கதாப்பாத்திரம் கடந்து...

திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு!- தென்னிந்திய கலைஞர்கள் மெளனம்!

நம் நாட்டில் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இனி செயல்படாது என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பாலிவுட் கலைஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்...

“சொன்னபடி நாளை ‘கர்ணன்’ வெளியாகும்!”- கலைப்புலி தாணு அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக...

71 வயசு – இன்றும் நம்பர் 1 நாயகன் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது!

இந்திய திரை உலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனக்குள் எரிந்துகொண்டிருந்த நடிப்பு என்ற தீயை ஆரம்பகாலப் படங்களில்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.