மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் ‘மாறா’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ரசிகர் களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை (2020 அக்டோபர் 9) அட்டகாசமான வடிவத்தில் வெளியான ‘மாறா’ பட ஃபர்ஸ்ட் லுக், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசான் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக் குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை சொல்லும் அழகான ஓவியம் போல் அமைந்திருக்கிறது. மிக நேர்த்தியான வடிவமைப்பில், கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்குடன், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதியும் வெளியாகியிருப்பது, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
முன்னணி கதாபாத்திரங்கள் இருவரும், மனதை கவரும் தோற்றத்தில், போஸ்டரின் வேறு வேறு பக்கங்களில் இருக்க, போஸ்டரில் இரு வேறு களங்கள் காட்சியளிக்கிறது. ஒரு கடற்கரை பகுதி மற்றும் ஒரு மலைப்பகுதி அதில் எதையோ தேடி நடக்கும் ஒரு பெண் என கதையின் மையத்தை அழகான ஓவியமாக கொண்டிருக்கிறது போஸ்டர்.
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற ‘கல்கி’ படத்தினை உருவாக்கிய இயக்குநர் திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார். பிபின் ரகுவுடன் இணைந்து திலீப் குமார் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.
எப்போதும் காதல் கதைகளில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை, உயிரை உருக்கும்படி இருக்கும். அந்த வகையில் ‘மாறா’ படக் குழு இப்படத்தில் ஜிப்ரானின் இசை, இசைக் காதலர்களுக்கு பெரு விருந்தாக இருக்குமென உறுதியளிக்கிறது.
திங் மியூஸிக் (Think Music) இசை உரிமையை பெற்றிருப்பதால் பட இசை கண்டிப்பாக பட்டிதொட்டியெங்கும் பரவி, பெரும் வெற்றியை பெறும் என்பதில் ஐயமில்லை. இப்படத்தின் பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார்.
படத்தின் போஸ்டரே படத்தின் விஷுவல்கள் அட்டகாசமாக இருக்கும் என்பதற்கு சான்றினைத் தருகிறது. ஒளிப்பதிவாளர்கள் கார்த்திக் முத்துகுமார், தினேஷ் கிருஷ்ணன் B மற்றும் கலை இயக்குநர் அஜயன் ஜலிசரி ஆகியோர் கண்டிப்பாக இப்படத்தின் மூலம் பெரும் பாராட்டை பெறுவார்கள். படத் தொகுப்பை புவன் ஶ்ரீநிவாசன் செயதுள்ளார்.
தபஸ் நாயக் இப்படத்திற்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். ஸ்பலாட் ஸ்டூடியோ ( splat studio ) விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளனர். ஏக் லகானி மற்றும் ரெம்யா சுரேஷ் உடை வடிவமைப்பை செய்துள்ளனர். விளம்பர வடிவமைப்பை கோபி பிரசன்னா செய்துள்ளார். SP cinemas லைன் புரடக்சன் பணியை செய்துள்ளனர். தயாரிப்பு ஒருங்கிணைப்பை ( Executive Producer) கோகுல்.K செய்துள்ளார்.
ப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். மனதை மயக்கும் கதையம்சத்துடன் மிக அழகான காதலை சொல்லும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வரும் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது.