11
Oct
மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் ‘மாறா’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ரசிகர் களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை (2020 அக்டோபர் 9) அட்டகாசமான வடிவத்தில் வெளியான ‘மாறா’ பட ஃபர்ஸ்ட் லுக், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசான் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக் குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை சொல்லும் அழகான ஓவியம் போல் அமைந்திருக்கிறது. மிக நேர்த்தியான வடிவமைப்பில், கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்குடன், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதியும் வெளியாகியிருப்பது, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. முன்னணி கதாபாத்திரங்கள் இருவரும், மனதை கவரும் தோற்றத்தில், போஸ்டரின் வேறு வேறு பக்கங்களில் இருக்க, போஸ்டரில் இரு வேறு களங்கள் காட்சியளிக்கிறது. ஒரு கடற்கரை பகுதி மற்றும் ஒரு மலைப்பகுதி அதில் எதையோ தேடி…