’டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

’டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

  எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'டெஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் வைஸ் பிரெசிடெண்ட் மோனிகா ஷெர்கில், "தமிழ் சினிமாவில் திறமையான கதைகள் பல வெளியாகி இருக்கிறது. இதில் 'டெஸ்ட்' திரைப்படமும் ஒன்று. இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா கதை குடும்பம், முக்கிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசும். இயக்குநர் சஷிகாந்த் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் என திறமையான நடிகர்கள் அனைவரும் முதல் முறையாக இந்த படத்திற்காக ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். இந்த வருடம் எங்களுடைய முதல் ஒரிஜினல் தமிழ் திரைப்படம் 'டெஸ்ட்'. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்" என்றார். நடிகர் மாதவன், “ஒரு கதாபாத்திரம் எடுத்து வந்தால் நல்லவராக இருந்தாலும் சரி வில்லனாக…
Read More
‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று ப்ரீமியர் ஆகிறது!

‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று ப்ரீமியர் ஆகிறது!

மூன்று நடிகர்கள், ஒரு கிரிக்கெட் போட்டி மற்றும் வாழ்க்கையை மாற்றும் ஒரு கதை: ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று ப்ரீமியர் ஆகிறது! நம் வாழ்வின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. சில சோதனைகள் உங்கள் தைரியம், உங்கள் கனவுகள் மற்றும் உங்கள் தியாகங்களை சோதிக்கும். ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் 'டெஸ்ட்' திரைப்படம் ப்ரீமியர் ஆகிறது. கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் 'டெஸ்ட்'. இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. துணிச்சலான மற்றும் அழுத்தமான கதைகளைத் தயாரித்த 'YNOT' ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இது…
Read More
நடிகர் மாதவன் நடிப்பில்,  ‘ஹிசாப் பராபர்’ ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது !!

நடிகர் மாதவன் நடிப்பில், ‘ஹிசாப் பராபர்’ ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது !!

முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், கடந்த ஆண்டின் "சைத்தான்" பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த அதிரடி திரைப்படமான ‘ஹிசாப் பராபர்’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இப்படம் இப்போது ZEE5 இல் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. ஹிசாப் பராபரில், ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு சாதாரண மனிதனாக, மாதவன் நடித்துள்ளார். அஷ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை, ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினிகார்ப் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நீல் நிதின் முகேஷ் மற்றும் கிர்த்தி குல்ஹாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நையாண்டி பாணியில் சமூக அக்கறை மிக்க படைப்பாக, ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு சாதாரண ரயில்வே டிக்கெட் பரிசோதகரான ராதே மோகன் ஷர்மா (ஆர். மாதவன்),…
Read More
தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார்

தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார்

  தமிழ்ப் படம்', 'விக்ரம் வேதா', 'இறுதி சுற்று' மற்றும் தேசிய விருது பெற்ற 'மண்டேலா' உள்ளிட்ட பல வெற்றிகரமான மற்றும் பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரான YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார். *மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தை YNOT ஸ்டுடியோஸ் பேனரில் தயாரித்து இயக்குகிறார் எஸ். சஷிகாந்த்*   பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் திறமை மிகுந்த தயாரிப்பாளரான எஸ். சஷிகாந்த், தனது 23வது தயாரிப்பான 'டெஸ்ட்' மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.   கதை சொல்லலில் ஆழ்ந்த ஆர்வம், திறமைகளை கண்டறிவதில் மிகுந்த ஈடுபாடு, புதிய முயற்சிகளை கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றால் இதுவரை அறியப்பட்ட எஸ்.சஷிகாந்த்தின் திரைப்பட இயக்கத் திறமையை பறைசாற்றவுள்ள 'டெஸ்ட்' திரைப்படத்தில் பிரபல நட்சத்திரங்களான மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.   * தயாரிப்பாளர் சக்ரவர்த்தி…
Read More
மாதவன் உடைய ராக்கெட்ரி சரியாக ஏவப்பட்டதா?

மாதவன் உடைய ராக்கெட்ரி சரியாக ஏவப்பட்டதா?

‘ராக்கெட்ரி’ திரைப்படத்தையை மாதவன் எழுதி இயக்கி நடிப்பதோடு மட்டுமின்றி சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோருடன் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ளார், சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார், பிஜித் பாலா படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, கடினமாகவும், பல தடைகளை தகர்ந்தெரிந்தும் ஓடிகொண்டிருக்கும் ஒரு விஞ்ஞானியை பொய் வழக்கு போட்டு, அவரது வாழ்கையையே முடிக்கிறார்கள். விண்வெளியில் தன் சாதனைகளை புரிய வேண்டிய அவர் தன் மீது உள்ள கலங்கத்தை துடைக்க ஓட வேண்டியுள்ளது அவர் மேல் இருக்கும் கலங்கத்தை அவர் துடைத்தாரா, இந்தியாவின் விண்வெளி கனவு என்ன ஆனது என்பது தான் கதை. முதலில் நம்பி நாராயணன் போன்ற விஞ்ஞானி பட்ட கஷ்டங்களையும், கொடுமைகளையும் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட முயற்சி எடுத்த மாதவனை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு உண்மை கதை என்பதாலும், நம்பி நாராயணன் போன்ற…
Read More
இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்ட நம்பி நாரயணன்

இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்ட நம்பி நாரயணன்

நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் பான்-இந்தியன் திரைப்படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை இயக்கத்தோடு படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம்… ஜூலை 1, 2022 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஆர். மாதவன் பத்திரிகையாளர்களையும் ஊடகத் துறையினரையும் சந்தித்து 'ராக்கெட்ரி'. படத்தை உருவாக்கியது பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நடிகர் மற்றும் இயக்குநர் மாதவன் கூறியதாவது.., விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு…
Read More
மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’-அமேசானில் ரிலீஸ்!

மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’-அமேசானில் ரிலீஸ்!

மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் ‘மாறா’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ரசிகர் களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை (2020 அக்டோபர் 9) அட்டகாசமான வடிவத்தில் வெளியான ‘மாறா’ பட ஃபர்ஸ்ட் லுக், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசான் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக் குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை சொல்லும் அழகான ஓவியம் போல் அமைந்திருக்கிறது. மிக நேர்த்தியான வடிவமைப்பில், கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்குடன், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதியும் வெளியாகியிருப்பது, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. முன்னணி கதாபாத்திரங்கள் இருவரும், மனதை கவரும் தோற்றத்தில், போஸ்டரின் வேறு வேறு பக்கங்களில் இருக்க, போஸ்டரில் இரு வேறு களங்கள் காட்சியளிக்கிறது. ஒரு கடற்கரை பகுதி மற்றும் ஒரு மலைப்பகுதி அதில் எதையோ தேடி…
Read More