பல இன்னல்கள் கடந்து ‘TPTK’ படத்தை ரிலீஸ் செய்கிறோம் – கயல் ‘சந்திரமெளலி’!

அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் ‘2 Movie Buff ‘ நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இப்படத்தில், கயல்’ சந்திர மௌலி, சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சாம்ஸ், டேணியல் ஆணி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர். SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர் கூறும்போது, ‘கிரிக்கெட் உலகக் கோப்பையை திருடுவதே ஒரு தனித் துவமான யோசனை தான், அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவம் பார்கிறேன் என்றால், இதில் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும்.

பொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சியோ, காதல் காட்சியோ தான் பொதுவாக இருக்கும், நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும், ஒரு காட்சியையும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திருக்காத வகையில் இருக்கும்.

கலை இயக்கத்தை பற்றி சொல்லியாக வேண்டும், எங்கள் கலை இயக்குனர் மிக சிறப்பாக தன் பங்கை அளித்துள்ளார். மியூசியம் செட் ஒன்று படத்தில் உள்ளது. அது செட் என்றே தெரியாத வகையில் அத்தனை வெண்கல சிற்பங்களை கொண்டு துல்லியமாக வடிவமைத்து உள்ளார். எங்கள் ஒளிப்பதிவாளர் அவரின் ஒளிப்பதிவின் மூலம் படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார். படம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்” என்றார்.

இவ்விழாவில் பேசிய கயல் சந்திரமெளலி, ‘கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘ திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். அது எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம். எதை மூடி காண்பிக் கணுமோ அதை மூடி தான் காட்டணும், எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து தான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டுமே காண்பிக்க வேண்டும். பல இன்னல் களை தாண்டி, பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை..சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறோம்.’ என்று கூறினார்.

எழுத்து & இயக்கம் – சுதர், ஒளிப்பதிவு – I.மார்டின் ஜோ, இசை – அஷ்வத்,

படத்தொகுப்பு – வெங்கட்ரமணன் KJ, கலை – ரெமியன்,

பாடல் வரிகள்
நிரஞ்சன் பாரதி
முரளிதரன் KN
சுதர்

நடனம்
கல்யாண்
ஆண்டோ

சண்டைப்பயிற்சி
“பில்லா” ஜெகன்

PRO: C N குமார்