004-ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் M.ஞானசுந்தரியின் தயாரிப்பில் இயக்குநர் ஷிவ்ராஜின் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து வெற்றி பெற்ற படம் ‘அடிதடி’. மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது. ‘சினிமா நடிகனும் அரசியல்வாதி யும்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் M.ஞானசுந்தரி பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார்.
இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுத, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ். ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகும்போது என்னென்ன நிகழ்வுகள் நடந்த, நடக்கின்றன.. நடக்கும் என்பதை அரசியல் நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க, முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது ‘சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது.
சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் வெற்றிக் கூட்டணி முதன் முறையாக ஹிந்தியில் தடம் பதிப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.