நடிகர் நித்தின் சத்யா தனது தயாரிப்பு நிறுவனமான ‘ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்’ சார்பாக சென்ற வருடம் ஜெய் நடிப்பில் உருவான ‘ஜருகண்டி’ படத்தை தயாரித்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தற்போது அவர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் ‘லாக்கப்.’
முழுக்க, முழுக்க இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உடன் பல நடிகர், நடிகையர்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை புதுமுக இயக்குநரான S.G.சார்லஸ் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் மோகன் ராஜாவிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான ‘லாக்கப்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தற்போது இத்திரைப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ZEE5 OTT தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது.
மிகப் பெரிய கான்டெக் நிறுவனமான ZEE5, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த, பல வகையான சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
அந்த வரிசையில் ZEE5-ல் வெளியாகவிருக்கும் ‘லாக்கப்’ திரைப்படம் மிகச் சிறந்த, சிலிர்க்க வைக்கும் திரில்லருடன் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டுவரும். அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
இசை – ஆரோல் கரோலி, ஒளிப்பதிவு – சாண்டி, படத் தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த், கலை இயக்கம் – ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).