2009ம் ஆண்டு கபடி போட்டியை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது. மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில் இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் விரைவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கவுள்ளது. அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாகவும் பிரம்மாண்ட மாகவும் எடுக்கப்பட்டுள்ளது “வெண்ணிலா கபடி குழு 2”.
1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளதாகவும், மேலும் முதல் பாகத்தில் நடித்த புரோட்டா சூரி, அப்புகுட்டி என பல நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்தது இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது என்று கூறியுள்ளார் இயக்குனர் செல்வசேகரன்.
இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.
படத்திற்கு இசை – செல்வகணேஷ்
ஒளிப்பதிவு – E. கிருஷ்ண்சாமி
சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன்
மக்கள் தொடர்பு – P.T.செல்வகுமார்
நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட மின்னொலி கபடி போட்டியை 8 நாட்கள் தொடர்ந்து தத்ருபமாக படமாக்கியுள்ளார்கள். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக “வெண்ணிலா கபடி குழு 2” படம் அமையும்.