இந்திரஜித் – பல விஷயங்களை சாதிக்க காத்திருக்குன்னு யாராவது சொல்லிருந்தா நம்பிடாதீங்க.! – கலா பிரபு பேட்டி!

இன்று ரிலீஸாக போகும் இந்திரஜித் படம் குறித்து நம்மிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் கலா பிரபு, ”இந்த படத்தோட கதை பத்தி நான் முன்னரே சொன்னது மாதிரி முதல்ல ஆக்‌ஷன் ப்ளஸ் ட்ராவல் அட்வெஞ்சர்னு ஒரு லைன் பிடிச்சேன். அந்த ஐடியாவை டெவலப் பண்ணும்போது ஒரு இண்ட்ரெஸ்டிங் ஸ்க்ரிப்ட் வந்துச்சு. அதுக்காக இந்த இந்திரஜித் திரைப்படம் பல விஷயங்களை சாதிக்க காத்திருக்குன்னு யாராவது சொல்லிருந்தா நம்பிடாதீங்க. படம் பார்க்க வர்றவங்களை 1 மணிநேரம் 57 நிமிடங்கள் மகிழ்ச்சியா இருக்க வெச்சு வீட்டுக்கு அனுப்ப முயற்சி பண்ணிருக்கேன். எந்த எல்லைக்கு உள்ளேயும் படத்தை நிறுத்தல. இன்றைய நிலைக்கு மக்கள் தேடிப்போற ஒரு விஷயத்தை படத்துலயும் தேடிப்போறாங்க அவ்வளவு தான்.

அது வைரமோ, தங்கமோ இல்லை. அதைமீறிய ஒரு பொருளா இருக்கும். அப்படிப்பட்ட பொருளுக்காக போராடுற ஒரு கேரக்டர் எப்படி இருக்கும்னு யோசிச்சு அப்பறம்தான் இந்திரஜித் உருவாக்கப்பட்டான். அந்த கேரக்டர் ஒரு சுத்தமான ஆத்மாவா இருக்கணும்னு எனக்கு நானே கண்டிப்பா முடிவு பண்ணிட்டேன். நீ எப்படி நடத்தப்படணும்னு விரும்புறியோ, மத்தவங்களையும் அப்படியே நடத்துன்னு சொல்றதை பக்காவா ஃபாலோ பண்ற ஒரு கேரக்டர் தான் இந்திரஜித். அந்த கேரக்டரை பண்றதுக்கு குழந்தை முகம் கொண்ட கௌதம் தான் சரியானவரா இருப்பாருன்னு தோணுச்சு. ரொம்ப சந்தோஷமா, எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்க ஒரு கேரக்டர் அவர்.

இதுக்கிடையிலே குழந்தைகளுக்கான ஒரு நேரடி படம் வந்து எத்தனை வருஷம் ஆகுது சொல்லுங்க பார்க்கலாம். முந்தைய தலைமுறைக்கு மை டியர் குட்டிச்சாத்தான் மாதிரியான படங்கள் இருந்தது. இந்த தலைமுறைக்கு குழந்தைகளுக்கான படம்னா, அதுவும் அவங்க கஷ்டப்படுற மாதிரிதான் இருக்கு. அதெல்லாம் இல்லாம குழந்தைங்க படத்துக்கு வந்து சிரிச்சு, பிரம்மிச்சு, கொண்டாடி, கலைஞ்சு போகணும் வீட்டுக்கு. அதுக்காக தான் இந்த அட்வெஞ்சர் ஆக்‌ஷன் படம். குழந்தைங்க சிரிக்கிறதை பார்க்குறதே தனி சந்தோஷம் தான். கிஃப்ட் கொடுக்குறதே, அதைப் பிரிச்சு பார்க்கும்போது அவங்க முகத்துல ஏற்படுற சந்தோஷத்தைப் பார்த்து நாம சந்தோஷப்பட தானே. அந்த சந்தோஷத்தைக் கொடுக்கவும், ரசிக்கவும் ஆள் இல்லையோன்னு தோணுச்சு. இங்க விழுந்த இடைவெளியை இந்திரஜித் மூலம் தீர்க்க ட்ரை பண்ணி இருக்கோம் .

அதே சமயம் குழந்தைகளுக்கான படம்னு சொன்னதும் ஏதோ மேஜிக் எல்லாம் இருக்கும்னு எதிர்பார்க்கவேண்டாம். உண்மை யாவே இந்தியாவுக்குள்ள இருக்க பல முக்கியமான இடங்கள்ல படமாக்கியிருக்கோம். நான் நேத்திக்கு ச்நொன்னது மாதிரி பொதுவாவே அட்வெஞ்சர் ரைடு போறதை வழக்கமா வெச்சிருக்கேன். அதனால் எந்தெந்த ஷாட் எங்கெங்க வைக்கலாம்னு பல மாசமா நானே நேர்ல போய் செலெக்ட் பண்ணிருக்கேன். இப்படி நான் தேடித்தேடி படத்துல பல விஷயங்கள் சேர்த்திருக்கேன்.

மொத்தத்திலே பெரும்பாலானவங்க ரசிச்ச ட்ரெய்லர்ல இருந்தது தான் படத்துல இருக்கு. படத்துல இருக்குறதை மட்டும் தான் ட்ரெய்லர்ல கட் பண்ணிருக்கோம். வேகமா, ஆர்வமா படம் போகும். முகச்சுளிவு எங்கயுமே இருக்காது. வழக்கமான சினிமாத்தனத்துக்கு வெளிய போய் தான் இந்தக்கதையையே எடுத்திருக்கோம். ஒரு புது உணர்வைக் கொடுக்கும்னு சொல்லலாமே தவிர, புதுக்கதைன்னு சொல்லமாட்டேன். இந்த உலகத்துல புதுசுன்னு எதுவுமே கிடையாது. எல்லாம் ஆல்ரெடி எங்கயோ யாராலயோ எடுக்கப்பட்டது தான். படத்தை தியேட்டர்ல போய் பாருங்க. கண்டிப்பா சர்ப்ரைஸ் காத்திருக்கு. படம் (நவம்பர் 24) இன்று ரிலீஸ்.” என்றார் கலா பிரபு