தனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப் படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா , தனது சொந்த பட நிறுவனமான YSR பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மூலம் “பியார் பிரேமா காதல்” என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார். தற்போது அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் பெயர் இடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில்.நடந்து வருகிறது. இதை தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி,பியார் பிரேமா காதல் வெற்றி படத்தின் மூலம் ரசிகர் களின் இதயத்தில் கோலோச்சிய ரைசா வில்சன் “ஆலிஸ்” கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். “ஆலிஸ்” ஒரு பிரமாதமான கதை. இயக்குனர் கதை சொன்ன தருணத்திலேயே இந்த படத்துக்கு ஒரு பெரிய கதாநாயகி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியும், அதை தொடர்ந்து பெருகிய ரைசாவின் புகழும் அவரையே தேர்ந்து எடுக்க வைத்து உள்ளது. அவருடைய நடிப்பு திறமையும் , கட்டுக்கோப்பான தொழில் நேர்த்தியும் அவரையே கதாநாயகியாக்கியது.
மற்ற நடிக நடிகையர் தேர்வு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.எங்கள் நிறுவனத்தின் கோட்பாட்டின் படி இந்த படத்தில் இயக்குநர் மணி சந்திரன் தவிர, ஒளிப்பதிவாளர் எழில் அரசு , கலை இயக்குனர் ஏ ஆர் ஆர் மோகன், அர்ஜுனா நாகா ஏ கே படத்தொகுப்பாளராக அறிமுகமாகின்றனர். யுவன் ஷங்கர் இசை அமைக்கிறார் . படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ரசிகர்களுக்கு எங்களது நிறுவனம் தொடர்ந்து நல்ல படங்கள் வெளி வரும் என்று உத்திரவாதம் அளிக்கிறோம்” என்கிறார் தயாரிப்பாளர் இர்பான் மாலிக்.
Related posts:
சந்தேகப்படுங்கள்; ஆனால் தீர்ப்பு எழுதாதீர்கள் ! -இயக்குனர் அமீர்.May 6, 2024
அமீர் அடுத்த படத்து ஹிரோ யார் தெரியுமா?February 2, 2022
விஜய் ஆண்டனியின் ஸ்பை த்ரில்லர் ''கொலை'' படத்தின் இசையை வெளிட்ட இயக்குனர் மிஷ்கின்!July 11, 2023
அனுஷ்காவின் அசத்தல் நடிப்பில் 'பிரமாண்ட நாயகன் '!August 13, 2017
மதுரை அன்பு டார்ச்சர்: இயக்குநர் சசிகுமார் பார்ட்னர் சூசைட்!November 21, 2017