பேட்டா இசை வெளியீட்டு விழாவில் த்ரிஷா பேசியது என்ன?

0
322

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘பேட்ட’ படத்தில் ஒரு பாடல் 3-ம் தேதியும் அடுத்த பாடல் 7-ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று  தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் நடிகை த்ரிஷா பேசியது:

”ரஜினி சாரோட ரசிகர் இல்லைன்னு சொன்னாத்தான் எல்லோருக்கும் ஆச்சரியமா இருக்கும். இங்கே பேசினவங்களைப் போலவே, நானும் ரஜினி சாரோட பயங்கர ஃபேன். ரஜினி சார் 165 படத்துல நடிச்சிருக்கார். அவரோட இந்தப் படத்துல நானும் இருக்கேன்னு பெருமையா உணர்றேன்.

ஒரு விஷயம்தான் சொல்லணும்னு ஆசைப்படுறேன்.

ரஜினி சார் அவ்வளவு எளிமையா நடந்துக்கறார். செட்ல இருக்கற சீனியர், ஜூனியர் பாகுபாடெல்லாம் இல்லாம, எல்லார்கிட்டயும் ஒரேமாதிரியாத்தான் நடந்துக்கிட்டார். எல்லாருக்கும் மரியாதை கொடுத்து, எல்லார்கிட்டயும் பிரியமா நடந்துக்கிட்டு, இவ்வளவு எளிமையாப் பழகினார் ரஜினி சார். அவர்கிட்டேருந்து ஒரு பத்து சதவீதம் கத்துக்கிட்டு, அதன்படி நாங்க இருந்தாலே போதும்… மனிதாபிமானமிக்கவர்கள்னு ரஜினி சார் மாதிரியே நல்ல பேர் எடுக்கமுடியும்.

இந்த உலகத்துல ரஜினி சார் மாதிரி ஒருத்தரைப் பாக்கவே முடியாது. அவ்வளவு அன்பான, பண்பான, பந்தா இல்லாத மனிதர்.

ஹேஷ்டேக்ல #த்ரிஷா 16 டிரெண்டாகிட்டிருக்குன்னு சொன்னாங்க. 165 படத்துல நடிச்ச ரஜினி சார் எங்க? 16 வருஷம் சினிமால இருக்கிற நான் எங்க?

கமல் சார் பத்தியும் ரஜினி சார் பத்தியும் கேட்டீங்க. ரெண்டு பேரும் இத்தனை உயரங்களை அடைஞ்சிருக்காங்கன்னா அவங்களோட உழைப்பு, பந்தா இல்லாத பண்பு, எல்லாரையும் அரவணைக்கிற குணம்னுதான் சொல்லணும்.

நிறைய நேரம் ஷூட் போயிக்கிட்டே இருக்கோம். காலைல 9 மணிக்கு ஷூட்டிங்னா, 6 மணிக்கே வந்துருவாரு. போரடிக்குது. அதான் வந்துட்டேன்னு சொல்லுவாரு. என்ன சார், இவ்ளோ நேரம் ஷூட் போகுது, கேக்கமாட்டீங்களா சார்னு கேட்டேன். அதெப்படி? வேலைன்னு வந்தாச்சுன்னா முடிச்சுக் கொடுக்கணும்லன்னு ரஜினி சார் சொன்னார். அதான் ரஜினி சார்.

இந்தப் படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு கார்த்திக் சுப்பராஜ், ரஜினி சார், சன் பிக்சர்ஸ் எல்லாருக்குமே நன்றி”.