மஹத் & ஐஸ்வர்யா தத்தா ஜோடியாக நடிக்கும் ரொமாண்டிக் காமெடி படம்!

ரொமாண்டிக் காமெடி படங்கள் உலகளாவிய பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்து இழுக்கும். அந்த வகை ஜாலியான படங்களே மக்கள் கூட்டத்தை முழுவதுமாக இழுத்து விடும். குறிப்பாக, நல்ல அழகான ஜோடி நாயகன், நாயகியாக நடிக்கும்போது அது இன்னும் கூடுதல் ஈர்ப்பை தருகிறது.  ஹாலிவுட் இயக்குநர் ராண்டி கென்ட்டிடம் துணை இயக்கு நராகப் பணிபுரிந்த பிரபு ராம்.சி இயக்கும் ‘ரோம்-காம்’ திரைப்படத்தில், மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இயக்குநர் பிரபு ராம் இந்தப் படத்தைப் பற்றி கூறும்போது, “ரோம்-காம்’ படங்களின் தீவிர மான ரசிகன் நான். அது எந்த மொழி, எந்த நாட்டு படமாக இருந்தாலும் தவறாமல் பார்த்து விடுவேன். சேட்டிலைட் சேனலில் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்த காலம் முதல் எனக்கு ரொமாண்டிக் காமெடி படங்கள் இயக்கும் இயக்குனராக வேண்டும் என்பது ஆசை” என்றார். 

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் மில்லயன் ரசிகர்களின் ஃபேவரைட்டான, மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரையும் இந்த படத்துக்குள் கொண்டு வருவதற்கு பின் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்களையும் இயக்குனர் பகிர்ந்து கொள்கிறார்.

அது பற்றி அவர் கூறும்போது, “இந்த திரைப்படம் வட சென்னை பையன் மற்றும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணை சுற்றி நிகழும் கதை. அவர்கள் தங்கள் இயல்பு மற்றும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்டவர்கள். பக்கத்து வீட்டு பையன் போன்ற இயல்பான கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவரை நான் தேடிக் கொண்டிருந்தேன்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நான் பார்த்தபோது, மஹத்தின் இயல்பை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.  இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று உடனடியாக உணர்ந்தேன். அதேபோலவே ஐஸ்வர்யா தத்தா, அவரும் கதாபாத்திரத்திற்கு  ஏற்றவாறு இருப்பார் என்று நம்புகிறேன்…” என்றார். 

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ்  தயாரிக்கும் இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் தேர்வு முழுவீச்சில் நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த ‘ரோம்-காம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.