பலரையும் கவர்ந்த ஓ மை கடவுளே கதைப்போமா பாட்டு ஹிட் & அவுட்!

கல்யாணத்துக்கு அப்புறம் பிரெண்ட்ஸ கரெக்ட்டான டைம்க்கு மீட் பண்றது எவ்வளவு கஷ்டம்னு கல்யாணம் ஆனவங்களுக்குத் தான் தெரியும்…

நாலைஞ்சு வருசம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனத்துக்கு அப்புறம் பர்ஸ் நைட்க்கு ஒத்துக்கற லவ் மேரேஜ் எங்க…
யாருனே தெரியாம ஒரே நாள்ல கல்யாணம் பண்ணி அந்த நாளே பர்ஸ்ட் நைட்க்கு ஒத்துக்குற அரேன்ஜ் மேரேஜ் எங்க…
அரேன்ஜ் மேரேஜ் தான் கெத்து!

நம்மள விட ரெண்டு வயசு பெரிய பொண்ணு குறிப்பா அழகா இருக்கற பொண்ணு நமக்கு அக்காவ தான் இருக்கனும்னு அவசியம் இல்ல…

லவ்ல லாஜிக்லாம் இல்ல அது ஒரு மேஜிக்…

அவசரப்பட்டு டைவர்ஸ் வாங்குறவங்க தான் நிறைய அதிகம்… அவசரப்பட்டு கல்யாணம் பண்ணதால நிறைய பேரு டைவர்ஸே வாங்குறாங்க…

நம்ம ஆளுங்க பிரச்சினையா இதுதான்… யெஸ் சொல்ல வேண்டியதுக்கு நோ சொல்வாங்க… நோ சொல்ல வேண்டியதுக்கு யெஸ் சொல்லி அப்புறம் வாழ்க்க பூரா கஷ்டப்படுவாங்க…

மனுசன் நிம்மதியா உட்கார்ற ஒரே இடம் கக்கூஸ் தான்!

எந்த வேலையா இருந்தாலும் புதுசா சேர்ந்த எல்லாருக்கும் அது போரா தான் இருக்கும்… அதுக்கப்புறம் போக போக பழகிடும்…
எவனுக்குமே நிரந்தரமான சேர்ன்னு (பதவி) ஒன்னு கிடையவே கிடையாது…

குழந்தை பெத்துக்கறதுதான் வாழ்க்கையோட அடுத்த கட்டமே. பெத்துக்குறதுல தான் பெருமையே…

புடிச்ச விஷயம் கிடைக்குதோ இல்லயோ ட்ரை பண்ணனும்… புடிச்ச விஷயத்துக்காக அட்லீஸ்ட் ட்ரை பண்ணோமேங்கற நிம்மதியாவது கிடைக்கும்.

காதலிக்கு நாம கொடுக்கற கிஃப்ட்ட விட அந்த கிஃப்ட்க்காக நாம எடுத்த efforts தான் காதலிய ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணும்…

ஒரு பொண்ணு பக்கத்துல இருக்கும்போது அவளோட அருமை தெரியாது…

தன்னோட பிரச்சினைய தானே பேஸ் பண்றவன் தான் ஹீரோ

லைஃப்ல எல்லாமே லேட்டா தான் புரியுது… – இப்படி படம் முழுக்க கேஷூவலான வசனங்களால் யூத்களின் மனசைக் கவர்ந்த ஓ மை கடவுளே படத்தின் பலமே. கதைப்போமா பாடலின்போது வருகிற காட்சிகள் ரொம்ப ரசிக்கும்படி இருக்கு.

இந்தப் பாடலை மட்டும் பார்த்த கண்டிப்பா தியேட்டருக்கு போய் படத்தை பார்க்க வைத்து விடும்.. இதோ அப்பாடல் https://www.youtube.com/watch?v=DScFlfN9vDk&feature=youtu.be