தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்! -May 1 முதல் தொடக்கம்!

எல்லா மொழி சினிமாவும் அதன் பல்வேறு துறைகளும் நாள்தோறும் வளர்ச்சி அடைந்து கொண்டேதான் செல்கிறது. ஆனால் இங்குள்ள பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற ஆதங்கம் பல தரப்பிலி இருந்தும் வருவதால் தற்போது இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்.. பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கவும், பெண்கள் துறையில் அதிகரிக்கவும் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தை தொடங்க உள்ளார்கள். வைசாலி சுப்பிரமணியன் தலைவராகவும், ஏஞ்சல் சாம்ராஜ் துணை தலைவராகவும், ஈஸ்வரி V.P செயலாளராகவும், மீனா மருதரசி .S துணை செயலாளராகவும், கீதா .M பொருளாளராகவும் சேர்ந்து இந்த தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தை தொடங்கியுள்ளார்கள். இவர்கள் 5 பேர் செயற்குழுவாக இருக்கிறார்கள்.

இது குறித்து அக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், “இதனுடைய வேலைகள் கடந்த ஆறு மாத காலங்களாக நடைபெற்று கொண்டிருந்தது .இதை அதிகாரப்பூர்வமாக may 1 அன்று ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் .இது தொடர்பாக FEFSI தலைவர் R.K.செல்வமணி -கிட்ட பேசினோம் , அவர் நல்ல விஷயம் நீங்க பண்ணுங்க என்றார் .இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் எங்களை வாழ்த்தினார் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் P.C.ஸ்ரீராம் வாழ்த்துக்கள் சொன்னார் .

இந்த விழாவிற்கு P.C.ஸ்ரீராம் , வெற்றிமாறன் , சத்யராஜ் , ரோகினி , ரேவதி , சச்சு அம்மா , புஷ்கர் காயத்ரி மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் , ஒளிப்பதிவாளர்கள் , கீதா குருவப்பன் (sound engineer) இவர்களெல்லாம் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர் .ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் .விழாவில் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பாக ஒரு காலாண்டு மாத இதழ் வெளியிடுகிறோம் . இந்த் பத்திரிக்கையின் ஆசிரியர் ஈஸ்வரி V.P (மிஸ்கின் அசோசியேட்).

இந்த தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்திற்கு நிறைய பெண்கள் வரவேண்டும் .100 வருட தமிழ் திரைப்பட வரலாற்றில் இது ஒரு வரலாறாக இருக்கும் , அடுத்த தலைமுறைகள் இதில் வரவேண்டும் என்பதற்காக போடப்பட்ட அடித்தளம் இது .இதுக்கு உங்களுடைய ஆதரவும் வாழ்த்துக்களும் எங்களுக்கு தேவை ,நன்றி” என்று கேட்டுக் கொண்டுள்ளனர் .