திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு!- தென்னிந்திய கலைஞர்கள் மெளனம்!

திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு!- தென்னிந்திய கலைஞர்கள் மெளனம்!

நம் நாட்டில் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இனி செயல்படாது என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பாலிவுட் கலைஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய கலைஞர்கள் சிறிய முணகல் ஒலி கூட எழுப்பவில்லை இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு, இந்தியத் திரைப் படத் தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது. தணிக்கை வாரியம் கொடுக்கும் சான்றிதழை ஏற்க முடியவில்லை என்றாலோ, ஏற்க முடியாத அளவுக்குப் படத்தில் மாறுதல்களைச் செய்யச் சொன்னாலோ அல்லது தணிக்கை வழங்க மறுத்தலோ படத்தின் தயாரிப்பாளர்கள் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடுவார்கள். 1983ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தத் தீர்ப்பாயம் இனி செயல்படாது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இனி தணிக்கை வாரியத்துடன் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
Read More
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்! -May 1 முதல் தொடக்கம்!

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்! -May 1 முதல் தொடக்கம்!

எல்லா மொழி சினிமாவும் அதன் பல்வேறு துறைகளும் நாள்தோறும் வளர்ச்சி அடைந்து கொண்டேதான் செல்கிறது. ஆனால் இங்குள்ள பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற ஆதங்கம் பல தரப்பிலி இருந்தும் வருவதால் தற்போது இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்.. பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கவும், பெண்கள் துறையில் அதிகரிக்கவும் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தை தொடங்க உள்ளார்கள். வைசாலி சுப்பிரமணியன் தலைவராகவும், ஏஞ்சல் சாம்ராஜ் துணை தலைவராகவும், ஈஸ்வரி V.P செயலாளராகவும், மீனா மருதரசி .S துணை செயலாளராகவும், கீதா .M பொருளாளராகவும் சேர்ந்து இந்த தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தை தொடங்கியுள்ளார்கள். இவர்கள் 5 பேர் செயற்குழுவாக இருக்கிறார்கள். இது குறித்து அக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், “இதனுடைய வேலைகள் கடந்த ஆறு மாத காலங்களாக நடைபெற்று கொண்டிருந்தது .இதை அதிகாரப்பூர்வமாக may 1 அன்று ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் .இது தொடர்பாக FEFSI தலைவர் R.K.செல்வமணி -கிட்ட பேசினோம் , அவர் நல்ல…
Read More