நம்ம சிங்காரச் சென்னையில் பிறந்த அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என் பெயர் சூர்யா.. என் வீடு இந்தியா’. தெலுங்கு மொழியில் உருவான இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக் கிறது. நாட்டுப் பற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் துடிப்பு மிக்க இளம் ராணுவவீரர் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். இந்தப் படத்தை தெலுங்கு திரையுலகில் பல வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிய வக்கந்தம் வம்சி இயக்கு கிறார். இது இவரது இயக்கத்தில் வெளியாக உள்ள முதல் படமாகும்.
இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். சரத்குமார் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன், நதியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் மே 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஸ்ரீதர், ஞானவேல் ராஜா, இப்படத்தை தமிழில் விநியோகிக்கும் சக்திவேலன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதில் ஞானவேல் ராஜா பேசும்போது, ‘தெலுங்கு திரைப்பட உலகம் தான் சிறப்பாக இருக்கிறது. அனைவரும் அதிகம் லாபம் சம்பாதிக்கிறார்கள். ஒரு படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றால், அங்குள்ள நடிகர்கள் சம்பளம் 10 அல்லது 15 கோடி தான் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தையும் பிரம்மாண்டமாக கொடுக்கிறார்கள். ஆனால், இங்குள்ள நடிகர் கள் 100 கோடி பட்ஜெட் என்றால், படத்தின் நாயகனே 50 கோடி சம்பளம் கேட்கிறார். மீதியிருக்கும் பணத்தில் எப்படி படத்தை பிரம்மாண்டமாக எடுக்க முடியும்.
அது மட்டுமில்லாமல், தெலுங்கு நடிகர்கள் முன் பணமாக 50 லட்சம் கொடுத்தால் போதும். ஆனால், இங்கு முன் பணமாக 10 கோடி கேட்கிறார்கள். இதனால், தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். இதற்காக ஒரு குழு அமைத்து சம்பளத்தை வரைமுறை படுத்த வேண்டும். இதை நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சரி செய்வார் என்று நம்புகிறேன். இந்த சூழ்நிலை மாற வில்லை என்றால், தெலுங்கு படங்களை தயாரிக்க அங்கு சென்று விடுவேன். ஏற்கனவே அங்கு அலுவலகம் வாங்கி விட்டேன். ஏனென்றால் நஷ்டத்தில் படம் தயாரிப்பதைவிட லாபத்தில் படம் தயாரிக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள்’ என்றார்.
Related posts:
பத்திரிகையாளர் ஏக்நாத்தின் பாடல் ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பரிந்துரை!March 16, 2017
மின்வெட்டை மையமாக கொண்டு தயாரான ‘கனவு வாரியம்’February 10, 2017
பாரதிராஜா & ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த ‘கள்வன்’ - டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங்!May 11, 2024
பிப்.9ல் ரிலீஸாகப் போகும் கீ" படத்தின் இசை வெளியீட்டு விழா!January 20, 2018
வீரமே வாகை சூடும் எப்படி இருக்கிறது ?-திரைவிமர்சனம்February 5, 2022