கடமான் பாறை படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கே.ஆர். விஜயா

கடமான் பாறை படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கே.ஆர். விஜயா

நடிகர் மன்சூரலிகான்  தனது ராஜ் கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படம் ‘கடமான் பாறை’. இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். கதாநாயகியாக அனு ராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு   –  மகேஷ்.T, இசை  – ரவிவர்மா, பாடல்கள்  –  விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான், கலை  –  ஜெயகுமார், நடனம் –  டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா,. சண்டை பயிற்சி – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர், ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார், ஆக்கம், இயக்கம்  – மன்சூரலிகான். இந்த படத்தில் மன்சூரலிகானின் ஜோடியாக…
Read More
தமிழகம் பாலைவனமாகிவிடும்    மன்சூர்அலிகான் எச்சரிக்கை.

தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை.

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் பின்னர் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும்,வேலை செய்ய முடியாமல் போராடிக்கொண்டி ருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன். இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும். இந்த விவசாய மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப் பட்டு மாண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பால் மக்கள் குடி நீரைக் கூட சுத்தமாக குடிக்க முடியாமல் இருக்கிறார்கள். நானே அங்கு தண்ணீரை போரில் அடித்து குடித்த போது எண்ணெய் நாற்றம் பெட்ரோல் வாடை குமட்டுகிறது இதில் எப்படி விவசாயம் செய்ய முடியும்,குடிக்க முடியும், விவசாய உற்பத்திகள் என்ன ஆவது,…
Read More