மதுரை மக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்!

வைகை அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், மதுரையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நவம்பர் மாதம் முதல் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கபடாததாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 35 அடியாக குறைந்துள்ளது.

இதனால், கோடைக்காலத்தில் மதுரை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கினார்கள் தளபதி ரசிகர்கள்!

விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி.N .ஆனந்த் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தளபதி விஜய் ரசிகர்கள் செய்து வருவது வழக்கம். அண்மையில் மகளிர் தின விழாவை ஒட்டி பல பெண்களுக்கு சேலை அளித்தது. அந்த வரிசையில் மதுரை தெற்கு மாவட்ட தளபதி தலைமை மக்கள் இயக்கம் சார்பாக குடிநீர் தட்டுப்பாட்டில் தவித்த திருப்பரங்குன்றம் தொகுதி அனுப்பானடி உள்ள பாபுநகர் மக்களுக்கு .ராஜ் மனோ (55வது வார்டு) ஏற்பாட்டில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் .சுந்தர்ராஜன்,மற்றும் அவனி நகரசெயலாளர் அவனி சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் விநியோகம் செய்தனர் .