உறுமீன் புகழ் சக்திவேல் இயக்கத்தில் ஒரு நாயின் அட்வென்சர் படம்.!

இந்திய திரையுலகில் இதுவரை பல விதமான படங்கள் வெளியாகி விட்டன. படங்களில் விலங்குகளை வைத்தும் தமிழில் சில படங்கள் வெளியாகி இருந்தன. ஆனால் விலங்குகளை மையப்படுத்தி ஹாலிவுட்டில் மட்டுமே படங்கள் உருவாகி இருந்தன.இந்நிலையில் தற்போது அப்படியாக ஒரு படம் தமிழ் சினிமாவில் உருவாக உள்ளது. ஒரு நாயை தனித்துவமாக வைத்து ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தை உறுமீன் பட இயக்குனரான சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தை காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிப்பும் படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் இந்திய திரையுலகில் புதிய மைல் கல்லை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது  இன்று நகரத்தில் அதுவும் பிளாட் சிஸ்டத்திலும் வாழும் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை பராமரிக்கின்றனர். பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் மட்டுமே. பல வீடுகளில் தனது எஜமானர் ஒரு வார்த்தை ஏதாவது திட்டிவிட்டாலோ அல்லது கோபத்தில் அடித்து விட்டாலோ குழந்தைகளை போல் கோபித்துக்கொண்டு நாள் கணக்கில் பாராமுகம் காட்டுவதை காணமுடியும்.

அதேசமயத்தில் தனது எஜமானருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் ரத்த சொந்தங்கள் போல் துடிக்கும் இந்த ஜீவனை விட வேறு உயிரினங்களை காணமுடியாது. அதனால் தான் பல வீடுகளில் பெட்ரூம் வரை முன்அனுமதி பெறாமல் வந்து செல்லும் உரிமையை பெற்ற உயிரினமாக மாறியுள்ளது.

உலகில் சுமார் 1500க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த நாய்கள் உள்ளன. ஆனால் இதில் 300க்கும் மேற்பட்ட நாய்கள் மட்டுமே மனித சமூகத்தோடு ஒன்றி வசிப்பவை. அனைத்து வகை நாய்களையும் வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது. சிலவற்றின் குணாதிசயம், மனித இனத்தோடு ஒத்துப்போவதில்லை.

அதன் மரபணுக்களை பொறுத்து அதன் குணாதிசயங்களும் மாறுகின்றன. சில நாய்களை வீட்டில் செல்ல பிராணிக்கு பதில் பாதுகாப்பாக வளர்க்கமுடியும். சில வகை நாய்களை விளையாட்டு போட்டிகள் மற்றும் தவறுகளை கண்டறியும் துப்பறியும் பணிகளுக்கு பயன்படுத்தமுடியும். லெப்ராடர், ஜெர்மன் ஷெப்பேர்டு, பீகல், புல்டாக், பாக்ஸர், பியர்ட்கோலி, பக், சசெக்ஸ் ஸ்பேனி என ஒவ்வொரு நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் நாய் இனங்கள் உள்ளன. இந்தியாவில் ராஜபாளையம், கோம்பகன்னி, கோம்பை உள்ளிட்ட நாய் வகைகள் இந்தியாவில் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

மேலும்  நாய்கள் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய சில விசயங்களை பலரும் கவனத்தில் கொள்வதில்லை.. முதலில் நாய்களுக்கு பெயர் இடுவது . நாய்களுக்கு மொழி, அர்த்தம் எதுவும் புரியாது என்றாலும், ஓசையை எளிதாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவை. அந்த ஓசை அவைகள் விரும்பும் வண்ணம் இருக்க வேண்டும். ஒரு சில பெயர்களை, அதாவது ஓசையை நாய்கள் பெரிதும் விரும்புகின்றன என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அப்படி பெயரிடும்போது, குட்டியில் இருந்து ஒரே பெயரை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி அதன்  பெயர்மாற்றம் செய்யக்கூடாது.

செல்லப்பிராணியான நாய்களுக்கு அவைகளுக்கெனப் பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்களை வைத்து நல்ல பழக்கங்களைப் பயிற்சித்தால் நம் சொல்படி நடக்கும். எல்லா வகையான நாய்களுக்கும் எல்லா பயிற்சி முறைகளும் ஒத்து வராது. ஒரு நல்ல பயிற்சியாளர், நமது நாய் வகையைப் பார்த்து, அதற்கு என்ன மாதிரியான பயிற்சிகள் ஒத்துவரும் என்பதை சொல்லிவிடுவார். மற்ற இன நாய்களுடன் ஒப்பிட்டு, அவை செய்யும் அனைத்தையும் நமது நாயும் செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடாது. எல்லாமே நாய்கள் என்றாலும், இனம், வளர்ச்சி இதனைப் பொறுத்து ஒவ்வொன்றும் திறனில் வித்தியாசப்படும்.

எனது நாய் அப்படி செய்யும், இப்படி செய்யும் என்று பெருமைக்காக மற்றவர்களிடம் காட்டுவதற்கென்று, நாய்களுக்கு பயிற்சி என்ற பெயரில் அவை விரும்பாத விசயங்களைத் திணிக்கக்கூடாது. அவைகளுக்கென்று உள்ள சுதந்திரம் என்றும் பாதிக்கப்பட்டிராத வகையில் பயிற்சிகள் இருக்க வேண்டும். இதனை ஒரு நல்ல பயிற்சியாளரால் மட்டுமே கொடுக்க முடியும். நாய்களுக்கு பயிற்சிகள் கொடுக்கும் முன்பு, நல்ல பயிற்சியாளரை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது.

மனிதர்களுக்கு வருவது போல், நாய்களுக்கும் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவது இயல்பு. நமக்கு குடும்ப டாக்டர் என்று ஒருவரை வைத்துக் கொள்வது போல், நமது செல்லப் பிராணிகளுக்கும் ஒரு நல்ல அனுபவமுள்ள கால்நடை மருத்துவரை வைத்துக் கொள்ள வேண்டும். நாய்களுக்கான தடுப்பூசிகளை காலத்தில் அவற்றுக்கு போட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம். இது போன்ற பல விஷயங்களை அலசி, ஆராய்ந்து இதன் கதையை தயார் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக  இந்த படத்தில் ஒரு நாய்க்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும் ஒருவருக்கொருவர் உதவி கொள்ளும் விதத்தையும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளதாகவும் குழந்தைகள் கவரும் விதத்தில் ஒரு அட்வென்சர் படமாக இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.