அமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காஜல் அகர்வால் வெளியிட்டார்!

0
320

அமலாபால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ள காஜல் அகர்வால், அவரை ‘பேரழகி’ என வர்ணித்துள்ளார்.

அமலாபால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அதோ அந்த பறவை போல’. எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’. அதிலிருந்துதான் இந்தப் படத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

இன்று மகளிர் தினம் என்பதால், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காஜல் அகர்வால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காஜல் அகர்வாலும், அமலாபாலும் நெருங்கி தோழிகள் என்பதால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர்தான் வெளியிட வேண்டும் என்று விரும்பினாராம் அமலாபால். அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால், அமலாபாலை ‘பேரழகி’ என வர்ணித்துள்ளார்.

’அதோ அந்த பறவை போல’ படத்தை கே.ஆர்.வினோத் இயக்குகிறார். சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். ஜோன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.