விஷாலுக்கு எதிராக பரபரப்பை கிளப்பிய ‘சிவா மனசுலே புஷ்பா’ ஆடியோ விழா!

0
233

வாராகியின் எழுத்து , இயக்கம் , தயாரிப்பு மற்றும் நாயக நடிப்பில் தயாராகியிருக்கும் “சிவா மனசில புஷ்பா ” படத்தின் டைட்டிலே இப்படம் ஆரம்பித்த நாள் முதல், இன்று வரை அரசியல் வட்டா ரத்தில் அதிரடி பரபரப்பை கிளப்பி விட்டு வருக்கிறதென்றால்., நேற்று நடந்த இப்படபட இசை மற்றும் பாடல்கள் வெளியீடோ திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

அதற்கு காரணம், சீனியர் இயக்குனர்கள் எஸ் ஏ சந்திரசேகரன் , கஸ்தூரி ராஜா , எஸ்.வி.சேகர் , ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்ட வி.ஐ.பி .கள் கலந்து கொண்ட இவ்விழாவில்., இப்பட இசை வெளியீட்டிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக நடந்த இரண்டு அதிரடி  நிகழ்வுகள் தான் பெருங் காரணம்.

அதில் முதலாவதும், முக்கியமானதுமாக ஒட்டுமொத்த திரையுலகினராலும் பார்க்கப்படுவது ., விஷால் , நாசர் தலைமையிலான நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தாங்கள் பதவிக்கு வந்த போது., கலைஞர்கள் அனைவருக்கும் வீடு , வேலை வாய்ப்பு… என கொடுத்த வாக்குறுதிகள் எதையும் காப்பாற்றாததால்., பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நலிந்த கலைஞர்களில் ., நூறு மூத்த கலைஞர்களின்  குடும்பங்களுக்கு “சிவா மனசில புஷ்பா ” படத்தை  எழுதி ,இயக்கி , தயாரித்து நாயகராக நடித்தும் இருக்கும்  வாராகியும்.,  ,முன்னாள் எம்.பியும் , நடிகருமான ஜே.கே.ரித்திஷும் தங்கள் சொந்த பணத்தில் இருந்து தலா பத்தாயிரம் ரூபாயை ரொக்கமாக மூத்த நலிந்த கலைஞர்கள் நூறு பேருக்கும் தங்கள் கைகளால் வழங்கி, மொத்தம் பத்து லட்சம் ரூபாயை மேடையிலேயே பட்டுவாடா செய்ததும் அவர்கள் அனைவருக்கும் அந்த ஸ்பாட்டிலேயே பிரியாணி விருந்து வழங்கியதும்  பெரும் பாராட்டையும், பரபரப்பையும் ஒரு பக்கம் கிளப்பி விட்டுள்ளது .

இரண்டாவதாக இதே இசை விழாவில் ., “சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழா, அங்கு நடத்தப்பட வேண்டுமென்றால் ,நடிகர் சங்க செயலாளர் என்ற முறையில் விஷாலுக்கு தனியாக பத்து கோடி தரப்பட வேண்டும் … ” என விஷால் சார்பில் அவரது நெருங்கிய நட்பு நடிகர்கள் ரமணாவும் , நந்தாவும்

அந்த மலேசிய  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான, மலேசியாவை சேர்ந்த டத்தோ அன்வர் பாயிடம் பேசிய வீடியோ ஆதாரமும் வெளியிடப்பட்டு கோடம்பாக்கத்தில் மேலும் , பெரும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.

எது எப்படியோ ., வாராகியின் எழுத்து , இயக்கம் , தயாரிப்பு மற்றும் நடிப்பில் தயாராகியிருக்கும் “சிவா மனசில புஷ்பா ” படத்திற்கு டைட்டில் வைத்த நாள் முதல் இசை மற்றும் பாடல்கள் வெளியீடு நடந்த நாள் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லை. இப்பட , ரிலீஸ் என்ன மாதிரி  பரபரப்பை கிளப்பி விடுகிறது…. என பொறுத்திருந்து பார்ப்போம்!