Latest Posts

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய படம் மட்டி!

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப் பட்டுள்ள படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ்...

அன்பிற்கினியாள் பட பிரிமீயர் ஷோ அப்டேட் நியூஸ்!

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண் பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம்...

இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்!

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து...

விமர்சனங்களை அடக்கி வாசிங்க -கபடதாரி இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யம்!

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ் செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், .எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “கபடதாரி படத்தை நாங்கள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால், கொரோனா பிரச்சினையால் அது நடக்கவில்லை. படப்பிடிப்பு முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் எந்த பணிகளும் நடக்க வில்லை.ஆனால், அந்த ஆறு மாதங்களில் திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் பிரதீப் பட்டை தீட்டியதால் தான் படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது. படம் விறுவிறுப்பாக நகரும். ரசிகர்கள் அனைவரும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு படம் வேகமாக இருக்கும். பட தொடங்கிய உடன், இடைவேளை வந்தது போல இருக்கும், பிறகு க்ளைமாக்ஸ் வந்துவிடும். அந்த அளவுக்கு படம் கச்சிதமாக வந்துள்ளது.

இந்த படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்க தான் முயற்சித்தேன். ஆனால், சிபிராஜ் தான் என்னிடம் நானே நடிக்கிறேன், என்று கூறினார். பிறகு யோசித்தேன், நாம் வேறு ஒரு ஹீரோவுடன் அலைவதைவிட, நம் படத்தில் நடிக்கும் சிபிராஜையே நடிக்க வைக்கலாம் என்று. சிபிராஜ் இந்த படத்திற்கு கச்சிதமாக இருக்கிறார். அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. நந்திதா ஸ்வேதா ரெகுலர் நாயகிகள் போல், டூயட் பாடல் கேட்காமல், கதாப்பாத்திரத்தை புரிந்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் பெரிதும் பாராட்டப்படுவார். இந்த படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானதும் அவருக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழிலும் அவர் முன்னணி இசையமைப்பாளராக வருவார். அந்த அளவுக்கு படத்தின் பின்னணி இசை அமைந்துள்ளது. எனக்கு பல நேரங்களில் உதவி செய்தவர் சிவா சார். நான் சினிமா இண்டஸ்ரிக்கு வந்ததில் இருந்து அவர் நிறைய உதவி செய்துள்ளார். அவருக்கு நன்றி. ஜெயப்பிரகாஷ், நாசர் என அனைவரின் வேடமும் சிறப்பாக வந்துள்ளது. விஜய் ஆண்டனியுடன் தொடர்ந்து பயணிக்கிறேன். இனியும் தொடர்ந்து அவருடன் பல படங்கள் பணியாற்ற இருக்கிறோம். விழாவுக்கு வந்ததற்கு அவருக்கு நன்றி. ‘கபடதாரி’ எங்களுக்கு மட்டும் அல்ல சிபிக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.” என்றார்.

’கபடதாரி’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, “என்னுடைய தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த மேடையில் இருக்கிறார்கள். வாழ்க்கையில் நாம் முன்னேற யாராவது ஒருவர் தேவைப்படுகிறார்கள், அந்த வகையில் என் முன்னேற்றத்திற்கு தனஞ்செயன் சாரும் முக்கியமானவர். ஒரு முறை தனஞ்செயன் போன் செய்து, இப்படி ஒரு படம் இருக்கிறது, பண்ணுவீங்களா? என்று கேட்டார். படத்தை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடித்தது. உங்களுக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். என்னை நம்பி இந்த படத்தை கொடுத்த தனஞ்செயன் நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன், என்று நம்புகிறேன்.” என்றார்.

படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் பேசியதாவது, “லலிதா மேடமுக்கும் தனஞ்செயன் சாருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் தான் இப்படி ஒரு படம் இருக்கிறது, என்று கூறி என்னை பார்க்க சொன்னார்கள். படத்தை பார்த்ததும் ரொம்ப எக்சைட்மெண்டாகி விட்டேன். இந்த படத்தின் திரைக்கதை முழுக்க முழுக்க சுவாரஸ்யமாக, வித்தியாசமான பேட்டனில் இருந்தது. படத்தொகுப்புக்கான ஒரு படமாக இருந்தது. ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம், ரொம்ப சுவாரஸ்யம் நிறைந்த படமாக வந்துள்ளது. சிபி ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார். அவர் முதுகில் தான் முழுப்படமும் நகர்கிறது. ஜே.எஸ்.கே ,ஜெயப்பிரகாஷ், நாசர் சார் என அனைவரது கதாப்பாத்திரமும் இண்டர்ஷிடிங்காக இருக்கிறது. படம் முழுவதும் ஒரு ட்விஸ்ட் இருந்துக் கொண்டே இருக்கும். அது ரசிகர்களை எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கி கொண்டே இருக்கும். நிச்சயமாக இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவரும்.” என்றார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது, “இந்த இசை வெளியீட்டு விழாவில் தனஞ்செயன் சார் எப்படி அனைத்து பணிகளையும் செய்கிறாரோ, படப்பிடிப்பிலும் அப்படித்தான் இருப்பார். அனைத்து பணியிலும் அவருடைய ஈடுபாடு இருக்கும். பொதுவாக தயாரிப்பாளர்கள் அலுவலகத்தில் இருப்பார்கள், படப்பிடிப்பு நடக்கும். ஆனால், தனஞ்செயன் , அனைத்திலும் ஈடுபாட்டுடன் செயல்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதோடு, நமக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பான கதாப்பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். மொத்தத்தில், நான் முழு திருப்தியுடன் நடித்த படம். இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் சைமன் கே.சிங் பேசியதாவது, “இந்த படக்குழுவினருடன் எனக்கு இது இரண்டாவது படம். அதனால், நான் எனது குடும்பத்துடன் பணியாற்றியது போலதான் பணியாற்றினேன். . தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் நான் இசையமத்திருப்பது புதிய அனுபவமாக உள்ளது. தெலுங்கிற்கு வேறு நடிகர்கள், தமிழிக்கு வேறு நடிகர்கள். முக்கியமாக நாசர் சாருக்கு ஒரு பாடல் இருக்கிறது. அழகிய மொலோடியாக அந்த பாடல் இருக்கும். பின்னணி இசையை பொருத்தவரை கதைக்கு ஏற்றாவாறு தான் இருக்கும். பாடலா கட்டும், பின்னணி இசையகாட்டம் படத்திற்கு எது தேவையோ அதை தான் கொடுத்திருக்கிறோம், ஸ்கைப் உள்ளிட்ட ஆன்லைன் மூலம் ரெக்கார்டிங் செய்தோம். ஆனால், அனைத்தும் தரமாக உள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும்.” என்றார்.

நடிகை நந்திதா ஸ்வேதா பேசுகையில், “எனக்கு முன்பு பேசிய அனைவரும் அனைத்தும் சொல்லிவிட்டார்கள். நான் பொதுவாக நடிக்க கூடிய கதாப்பாத்திரங்களில் நடிக்க தான் விரும்புவேன். அப்படி ஒரு கதாப்பாத்திரம் தான் இந்த கதாப்பாத்திரம். தனஞ்செயன் பற்றி அனைவரும் சொல்வது உண்மை தான். அவரைப்போன்ற தயாரிப்பாளரை நான் பார்த்ததில்லை. அவர் ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பதோடு, திரைக்கதையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். இப்படி ஒரு தயாரிப்பாளர் சினிமா இண்டஸ்ட்ரிக்கும் முக்கியம். இந்த படத்தை நான் கன்னடத்தில் பார்த்துவிட்டேன். ரொம்ப சிறப்பான படம். தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்ததும் புது அனுபவமாக இருந்தது. சிபி ஜாலியான மனிதர். சீரியசான படமாக இருந்தாலும் சிபி இருந்ததால் செட் எப்போதும் ஜாலியாக இருக்கும். எனக்கு இந்த பட வாய்ப்பு கொடுத்ததற்கு லலிதா மேடமுக்கு நன்றி. படத்தின் இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. இசையமைப் பாளருக்கு என் வாழ்த்துகள்.” என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசியதாவது, “ தனஞ்செயன் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர், அதனால் தான் இத்தனை வருடங்கள் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு சினிமா மீது மிகப்பெரிய பேஷன். பணம் சம்பாதிக்கும் அனைத்து வழிகளும் அவருக்கு தெரியும். ஆனால், அவற்றில் செல்லாமல் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான், இந்த நேரத்தில் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பெரிய பாராட்டுக்களை பெற்று தரும். சிபி இந்த படத்திற்கு மிக பொருத்தமாக இருக்கிறார். இயக்குநர் பிரதீப் இந்த படம் மூலம் பெரிய வெற்றி பெற வேண்டும். சிபி நல்ல நடிகர். மிகப்பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும், அதை காண்பித்துக் கொள்ளாமல், தனது சொந்த முயற்சியில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். சினிமா கஷ்ட்டமான காலக்கட்டத்தில் இருந்து மீண்டு வருகிறது. இந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக விமர்சனத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செய்யாமல், விமர்சனமாக செய்ய வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகர் சிபிராஜ் பேசியதாவது, “கொரோனா பேண்டமிக் காலத்திற்குப் பிறகு நான் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது தான். கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசு, காவல்துறை, மருத்துவ பணியார்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிவா சார் சொன்னது போல, கபடதாரி ஜனவரி 28 ஆம் தேதி ரிலீஸாவதற்கான தைரியத்தை கொடுத்தது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் தான். எனவே விஜய் சார், நண்பர் சிம்பு மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கபடதாரி படம் கன்னட படத்தின் ரீமேக் தான் என்றாலும், தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். இந்த படத்தை ஒட்டி பிளாட்பார்மில் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்தது. உடனே, தனஞ்செயன் சாரை தொடர்புக் கொண்டு இந்த படத்தின் உரிமையை கொடுங்கள், எங்களுடைய பேனரில் தயாரிக்கிறோம், என்றேன். ஆனால், அவர் நான் தயாரிக்கப் போகிறேன், என்று கூறி மறுத்துவிட்டார். உடனே, அப்படினா நானே நடித்து விடுகிறேன், சார் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் வேறு ஒரு ஹீரோவிடம் பேசிக்கொண்டு இருப்பதாக என்னிடம் சொன்னார். இருந்தாலும், என் உள்மனது இந்த படம் நமக்கு தான் வரும் என்று கூறியது. அதேபோன்று இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.” என்றார்

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசியதாவது, “தனஞ்செயன் சாரை எறும்பு போல சுறுசுறுப்பானவர் என்று சொன்னார்கள். பத்து எறும்பின் சுறுசுறுப்பு அவரிடம் உள்ளது. எல்லா பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்வார். தமிழ் சினிமாவுக்கு மிகவும் அவசியமான தயாரிப்பாளர். படத்தின் நாயகன் சிபியும் ரொம்ப இனிமையான மனிதர். இசையமைப் பாளர் சைமன் ரொம்ப நெருக்கமானவர், திறமையானவர். அவருக்கான உயரம் இன்னும் இருக்கிறது. தெலுங்கிலும் அவர் அறிமுகமாக இருக்கிறார், அதற்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. மாஸ்டர் போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். மற்ற நேரங்களில் பரவாயில்லை. ஆனால், இப்படி ஒரு கஷ்டமான காலக்கட்டத்தில் பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது. மக்கள் தியேட்டருக்கு வர வேண்டும், பெரிய படங்கள் போல சிறிய படங்களும் வெற்றி பெற வேண்டும். இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம் தான். நிச்சயம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.”என்றார்.

சமீபத்தில் வெளியான ‘கபடதாரி’ டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் ஜனவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

Latest Posts

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய படம் மட்டி!

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப் பட்டுள்ள படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ்...

அன்பிற்கினியாள் பட பிரிமீயர் ஷோ அப்டேட் நியூஸ்!

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண் பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம்...

இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்!

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து...

Don't Miss

பாலுமகேந்திரா – மறக்க முடியாத படைப்பாளி!

இலங்கையில் பிறந்தவருக்கு இயக்குநர்கள் டேவிட் லீன், சத்யஜித்ரே ஆகியோர்தான் மானசீக குரு. இருந்தாலும் போட்டோகிராபியே முதல்காதல் என்பதால் பயணம் அப்படி துவங்கியது.. எழுபதுகளின் துவக்கத்தில் மலையாள படங்களை ஒளிப்பதிவு செய்தவருக்கு, மிகப்பெரிய அளவில்...

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்!

ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகிய வற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத்...

டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’?

டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் 'நீ சுடத்தான் வந்தியா?' .காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்...

காமத்தை மையமாக்கி உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் -“SSHHH”!

காமத்தை மையமாக வைத்து உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “SSHHH”, தமிழில் முதல் முறையாக மாறுப்பட்ட கோணத்தில் உருவாகும் ஆந்தாலஜி திரைப் படமான “SSHHH” படத்தின், சமீபத்திய அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் ஆவலை...

Lyca வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” பட படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சிவாகர்த்திகேயன் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகும் “டான்” படத்தின் படப்பிடிப்பு இன்று 2021 பிப்ரவரி 11 கோயம்புத்தூரில் துவங்கியது. படத்தின் அனைத்து நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழுவினர் இதில் பங்கு கொண்டனர்....

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.