அட்டகாசமாக வெளியான ‘வேலைக்காரன்’ மோஷன் போஸ்டர்!

0
513

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. இதில் நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, சதிஷ், சிநேகா, ரோபோ ஷங்கர், விஜய் வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது, பிரபல திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும் ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.